பாடல் #37248
யார் அறிவார் என் வேதனையை
🔤 Yaar Arivaar En Vaedhanaiyai
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யார் அறிவார் என் வேதனையை யார் அறிவார் கண்ணீரையே விசாரிப்பார் யாருமில்லை தேற்றிடுவார் யாருமில்லை ஒன்றிரண்டு நாளா கொஞ்ச வருஷமா எத்தனை நாள் இந்த பாடுகளோ ஒன்றா இரண்டா கொஞ்ச சோதனையா ஏன் தான் இத்தனை சோதனையோ பாரச்சுமையை தாங்கி தாங்கி உள்ளம் உடைஞ்சுபோச்சு என் நெஞ்சமெல்லாமே நொறுங்கி போச்சு முடியலையே தாங்கிட முடியலையே இதற்கெல்லாம் சீக்கிரமாய் முடிவு வராதோ நினைத்தது எல்லாம் நடந்திடவில்லை விரும்பினதொன்றும் நிறைவேறவில்லை நம்பினதெல்லாம் கைகொடுக்கவில்லை எங்கு திரும்பி பார்த்தாலும் எல்லாம் நெருக்கம்தானோ ஏன் எந்தன் வாழ்விலே இந்த நிலைமையோ வீழ்ந்துவிட்டேன் இயேசுவே பாதத்திலே இனி எனக்கெல்லாமே நீர்தானய்யா வேடிக்கையான பொருளாய் போனேன் பலபேர் பார்த்து சிரித்திடவே சிலபேர் வாயில் பழி சொல்லானேன் நிந்தனையாக பேசிடவே எல்லாம் நினைத்து அழுது அழுது கண்ணீர் கண்ணீர் இல்லை இனிமேலும் தாங்கிட பெலனும் இல்லை உலகமெல்லாம் கைவிட்டுப் போனாலும் இயேசுவே ஒருநாளும் கைவிட மாட்டீரே நீர் அறிவீர் என் வேதனையை நீர் அறிவீர் கண்ணீரையே விசாரிப்பார் நீர் தானே - இயேசுவே தேற்றிடுவார் நீர்தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaar Arivaar En Vaedhanaiyai Yaar Arivaar Kanneeraiyae Visaarippaar Yaarumillai Thaerrituvaar Yaarumillai Onrirantu Naalaa Konjja Varushamaa Etthanai Naal Indha Paatugalo Onraa Irantaa Konjja Sodhanaiyaa Aen Thaan Itthanai Sodhanaiyo Paarachsumaiyai Thaangki Thaangki Ullam Utainjsupochsu En Nenjjamellaamae Norungki Pochsu Mutiyalaiyae Thaangkida Mutiyalaiyae Idharkellaam Seekkiramaay Mutivu Varaatho Ninaitthathu Ellaam Natanthidavillai Virumpinathonrum Niraivaeravillai Nampinathellaam Kaikotukkavillai Engku Thirumpi Paartthaalum Ellaam Nerukkamthaano Aen Endhan Vaazhvilae Indha Nilaimaiyo Veezhnthuvittaen Yesuvae Paadhatthilae Ini Enakkellaamae Neerthaanayyaa Vaetikkaiyaana Porulaay Ponaen Palapaer Paartthu Siritthidavae Silapaer Vaayil Pazhi Sollaanaen Nindhanaiyaaga Paesidavae Ellaam Ninaitthu Azhuthu Azhuthu Kanneer Kanneer Illai Inimaelum Thaangkida Pelanum Illai Ulakamellaam Kaivittup Ponaalum Yesuvae Orunaalum Kaivida Maatteerae Neer Ariveer En Vaedhanaiyai Neer Ariveer Kanneeraiyae Visaarippaar Neer Thaanae - Yesuvae Thaerrituvaar Neerthaanae