பாடல் #37246
இயேசுவே தேவனே இரட்சகரே
🎙 கிறிஸ்தவ பாடல்
இயேசுவே தேவனே இரட்சகரே கலக்கமில்லையே கண்ணீரில்லையே நீர் என்னோடு இருப்பதாலே (2) ஓ ஓ ஆ ஓ அல்லேலூயா ஓசன்னா (2) உம்மைப் போல இரட்சிக்க வேறொரு தெய்வம் இல்லயே இரத்தம் சிந்தி ஜீவன் தந்து உம்மைபோல இரட்சித்தது யாரையா? உலக இரட்சகரே (3) உம்மைப் போல நேசிக்க வேறொரு தெய்வம் இல்லையே தன்னைதானே பலியாக்கி உம்மைபோல நேசித்தது யாரையோ ஆசை நாயகனே (3) உம்மைப் போல மன்னிக்க வேறொரு தெய்வம் இல்லையே மகா பாவி என்னைக்கூட உம்மைப் போல மன்னித்தது யாரையா? இரக்கமுள்ளவரே (3)