பாடல் #37241
தடைகள் உடைக்கும் ராஜா
🔤 Thataigal Utaikkum Raajaa
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தடைகள் உடைக்கும் ராஜா ஓ! முன்னே செல்கிறீர் தடைகள் எல்லாம் உடைந்து நொறுங்கி இல்லாமல் போகிறதே அல்லேலூயா (3) ஒசன்னா அல்லேலூயா (2) அல்லேலூயா கோணலானவைகள் நேராய் மாறுதே கரடுமுரடெல்லாம் செவ்வையாய் மாறுதே உம் பிரசன்னத்தாலே மலைகளும் மெழுகுபோல உருகுதே வெண்கலக் கதவும் உடைந்தே நொறுங்குதே இரும்பு தாழ்ப்பாள்கள் முறிந்தே விழுகுதே நீர் சொன்னால் போதும் இயேசுவே கடலும் கூட விலகுமே இருண்ட இடமெல்லாம் வெளிச்சம் உதிக்குதே சங்கிலி கட்டுகளும் அறுந்தே விழுகுதே நீர் முன்னே செல்ல கதவுகள் தானாகவே திறக்குதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thataigal Utaikkum Raajaa O! Munnae Selkireer Thataigal Ellaam Utainthu Norungki Illaamal Pokirathae Allaelooyaa (3) Osannaa Allaelooyaa (2) Allaelooyaa Konalaanavaigal Naeraay Maaruthae Karatumuratellaam Sevvaiyaay Maaruthae Um Pirasannatthaalae Malaigalum Mezhukupola Urukuthae Venkalak Kathavum Utainthae Norungkuthae Irumpu Thaazhppaalkal Murinthae Vizhukuthae Neer Sonnaal Pothum Yesuvae Katalum Kooda Vilakumae Irunda Idamellaam Veliccham Uthikkuthae Sangkili Kattugalum Arunthae Vizhukuthae Neer Munnae Sella Kathavugal Thaanaagavae Thirakkuthae