பாடல் #37239
இராஜாக்களின் அதிபதியே
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
இராஜாக்களின் அதிபதியே சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே துதி கன மகிமை உமக்கே (2) நீர் பூமியின் ராஜா நீர் பரலோக ராஜா நீர் ராஜாதி ராஜாவே (2) அல்லேலூயா ஆமென் (3) தலைமுறை தலைமுறையாகவே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளே ஆட்சிசெய்கின்றீரே அரசாள்கின்றீரே என்றும் வாழ்கின்றீரே வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதப்படி வானம் பூமியெல்லாம் நீர் வாசம் பண்ண இடம் கொள்ளாதே ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்தும் எங்கள் தேவனே சர்வ அதிகாரமும் சர்வ வல்லமையும் உள்ள ராஜா நீரே