பாடல் #37227
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே
🔤 Rattham Jeyam Rattham Jeyamae
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே இயேசுவின் இரத்தம் ஜெயமே இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே சிலுவையின் இரத்தம் ஜெயமே பாவமில்லா இரத்தமே பாவம் போக்கும் இரத்தமே நம் ராஜாவின் இரத்தம் ஜெயமே ஆதி பிதா ஆதாம் செய்த பகை நீக்கி பரம பிதாவோடு நம்மை சேர்த்திட்டதே மகிமையைக் காண திரையை கிழித்து மகா பரிசுத்த ஸ்தலம் சேர்த்திட்டதே இயேசுவின் இரத்தம் சமாதானமே - இது பகைமை வேரை அறுத்திட்டதே சொட்டு சொட்டாய் இரத்தம் சிந்தினதினாலே - என் கெட்டுப்போன வாழ்வு மாறியதே பாவம் போக்க ஒரு பரிசுத்த இரத்தம் வானம் பூமியெங்கும் வேறொன்றுமில்லையே இயேசுவின் இரத்தம் இல்லையேல் பாவ மன்னிப்பு நமக்கில்லையே பொல்லாத சாத்தான் தலை நசுங்கிட என் இயேசுவின் ஒரு சொட்டு இரத்தம் போதுமே தோற்றுப்போன சாத்தான் எந்த வல்லமையும் நம் இயேசுவின் இரத்தம் முறியடித்திடுமே இயேசுவின் இரத்தம் வல்லமையே - இது எதுவும் செய்திடுமே வியாதிகள் எல்லாம் பெலவீனம் எல்லாம் நம் இயேசுவின் இரத்தம் சுகமாக்கிடுதே மந்திரங்க ளெல்லாம் செய்வினைகள் எல்லாம் நம் இயேசுவின் இரத்தம் சுட்டு எரித்திடுதே இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயமே என்றும் தோல்வி இதற்கில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Rattham Jeyam Rattham Jeyamae Yesuvin Rattham Jeyamae Rattham Jeyam Rattham Jeyamae Siluvaiyin Rattham Jeyamae Paavamillaa Ratthamae Paavam Pokkum Ratthamae Nam Raajaavin Rattham Jeyamae Aathi Pithaa Aathaam Seytha Pakai Neekki Parama Pithaavotu Nammai Saertthittathae Makimaiyaik Kaana Thiraiyai Kizhitthu Makaa Parisuttha Sthalam Saertthittathae Yesuvin Rattham Samaathaanamae - Ithu Pakaimai Vaerai Arutthittathae Sottu Sottaay Rattham Sinthinathinaalae - En Kettuppona Vaazhvu Maariyathae Paavam Pokka Oru Parisuttha Rattham Vaanam Poomiyengkum Vaeronrumillaiyae Yesuvin Rattham Illaiyael Paava Mannippu Namakkillaiyae Pollaadha Saatthaan Thalai Nasungkida En Yesuvin Oru Sottu Rattham Pothumae Thorruppona Saatthaan Endha Vallamaiyum Nam Yesuvin Rattham Muriyatitthitumae Yesuvin Rattham Vallamaiyae - Ithu Ethuvum Seythitumae Viyaathigal Ellaam Pelaveenam Ellaam Nam Yesuvin Rattham Sugamaakkituthae Manthirangga Lellaam Seyvinaigal Ellaam Nam Yesuvin Rattham Suttu Eritthituthae Yesuvin Rattham Jeyam Jeyamae Enrum Tholvi Idharkillaiyae