பாடல் #37178
இயேசுவே என் தேவனே
🔤 Yesuvae En Devanae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் தேவனே - 2 ஏன் இந்தப் புவிதனில் எதற்காக வந்தீர் - ஆ - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2 துக்கம் அடைந்திடவோ - 2 துயர் அடைந்திடவோ தூஷிக்கப்பட்டிடவோ ஓ - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2 வியாகுலம் அடைந்திடவோ - 2 வேதனை அடைந்திடவோ இரத்தம் சிந்திடவோ - ஓ! - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2 கைகள் கட்டப்படவோ - 2 கண்களும் கட்டப்படவோ கல்தூணிலும் கட்டப்படவோ ! - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே - 2 கன்னத்தில் அடிபடவோ - 2 கண்ணீர் விட்டிடவோ கவலைகள் அடைந்திடவோ - ஓ - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே? 2 முகத்தில் துப்பப்படவோ - 2 முகமும் மூடப்படவோ முதுகிலும் அடிபடவோ - ஓ - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2 பரிகாசம் அடைந்திடவோ - 2 பரிதாபம் அடைந்திடவோ பாடுகள் அடைந்திடவோ - ஓ எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2 வாரினால் அடிபடவோ - 2 வாதைகள் அடைந்திடவோ வதைக்கப்பட்டிடவோ எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2 தாகம் பசி அடைந்திடவோ - 2 தாடையும் பிட்கப்படவோ தரையிலும் தள்ளப்படவோ - ஓ! - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே - 2 மூங்கில் தடியால் அடிபடவோ - 2 முகங்குப்புற விழுந்திடவோ மூர்ச்சித்தும் விழுந்திடவோ ஓ - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2 சிரசினில் அடிபடவோ - 2 சிலுவையும் சுமந்திடவோ சிலுவையோடும் விழுந்திடவோ - ஓ! எதற்காய் வந்தீர் என் தேவனே - 2 முள்முடி சூடிடவோ - 2 மூன்றாணியில் தொங்கிடவோ மா வேதனைகள் அடைந்திடவோ - ஓ எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2 தலையில் கை கால்களிலும் - 2 ஆணிகள் துளைத்திடவோ விலாவில் ஈட்டி துளைத்திடவோ - ஓ! எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2 சிறுமைப்பட்டிடவோ - 2 சிலுவையில் அறையப்பட்டவர் சிலுவைதனில் மாண்டிடவோ - ஓ! -2 எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2 எனக்காய் இக்கோர - 2 பாடுகள் அடைந்தென்னை மீட்டு இரட்சிக்க வந்த - ஆ - 2 என் தேவனே உம்மை மறவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Devanae - 2 Aen Indhap Puvidhanil Edharkaaga Vantheer - Aa - 2 Edharkaay Vantheer En Devanae? - 2 Thukkam Atainthidavo - 2 Thuyar Atainthidavo Thooshikkappattidavo O - 2 Edharkaay Vantheer En Devanae? - 2 Viyaakulam Atainthidavo - 2 Vaedhanai Atainthidavo Rattham Sinthidavo - O! - 2 Edharkaay Vantheer En Devanae? - 2 Kaigal Kattappatavo - 2 Kankalum Kattappatavo Kalthoonilum Kattappatavo ! - 2 Edharkaay Vantheer En Devanae - 2 Kannatthil Atibatavo - 2 Kanneer Vittidavo Kavalaigal Atainthidavo - O - 2 Edharkaay Vantheer En Devanae? 2 Mugatthil Thuppappatavo - 2 Mugamum Moodappatavo Muthukilum Atibatavo - O - 2 Edharkaay Vantheer En Devanae? - 2 Parikaasam Atainthidavo - 2 Parithaabam Atainthidavo Paatugal Atainthidavo - O Edharkaay Vantheer En Devanae? - 2 Vaarinaal Atibatavo - 2 Vaathaigal Atainthidavo Vathaikkappattidavo Edharkaay Vantheer En Devanae? - 2 Thaagam Pasi Atainthidavo - 2 Thaataiyum Pitkappatavo Tharaiyilum Thallappatavo - O! - 2 Edharkaay Vantheer En Devanae - 2 Moongkil Thatiyaal Atibatavo - 2 Mugangkuppura Vizhunthidavo Moorchsitthum Vizhunthidavo O - 2 Edharkaay Vantheer En Devanae? - 2 Sirasinil Atibatavo - 2 Siluvaiyum Sumanthidavo Siluvaiyotum Vizhunthidavo - O! Edharkaay Vantheer En Devanae - 2 Mulmuti Sootidavo - 2 Moonraaniyil Thongkidavo Maa Vaedhanaigal Atainthidavo - O Edharkaay Vantheer En Devanae? - 2 Thalaiyil Kai Kaalkalilum - 2 Aanigal Thulaitthidavo Vilaavil Eetti Thulaitthidavo - O! Edharkaay Vantheer En Devanae? - 2 Sirumaippattidavo - 2 Siluvaiyil Araiyappattavar Siluvaidhanil Maantidavo - O! -2 Edharkaay Vantheer En Devanae? - 2 Enakkaay Ikkora - 2 Paatugal Atainthennai Meettu Iratsikka Vandha - Aa - 2 En Devanae Ummai Maravaen - 2