பாடல் #37177
பரலோக தேவனே பரிசுத்தர் இயேசுவே
🔤 Paraloga Devanae Parisutthar Yesuvae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோக தேவனே பரிசுத்தர் இயேசுவே பாவிகளாம் எங்கள் பாவங்களுக்காக பரிதாபமாக நீர் பலியானிர் இயேசுவே பரம பிதாவே பரம தந்தையே பரலோகை விட்டு நீர் பாரினில் வந்து பாதகராம் எமக்காய் ஜீவனையும் ஈந்தீரே கூரான இரும்பாணிகளால் செய்யப்பட்ட கிரீடத்தின் கூரான ஆணிகளால் பரிசுத்த சிரசினில் அடிக்கப்பட்டீரே அன்பர் இயேசுவே நீர் பரிசுத்த இரத்தம் சிரசினின்றோடி ஒழுகும் அக்கோரக் காட்சியினை யாரால் தாங்கக்கூடிய? எந்தன் இயேசு தேவனே திருக்கரங்கால்கள் விலாவினின்றும் திருசிரசினின்றும் திறந்து பாய்ந்தோடும் ஜீவ இரத்த ஆறை யார் சகிக்கக் கூடும்? திரு சரீரம் முழுவதும் பிறப்பட்டோராய் சிலுவையில் தொங்கி துடி துடித்து இரத்தம் சிந்தும் நேசரை பாவியே நீ நோக்காயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paraloga Devanae Parisutthar Yesuvae Paavigalaam Enggal Paavanggalukkaaga Parithaabamaaga Neer Paliyaanir Yesuvae Parama Pithaavae Parama Thanthaiyae Paralokai Vittu Neer Paarinil Vanthu Paadhakaraam Emakkaay Jeevanaiyum Eentheerae Kooraana Irumpaanigalaal Seyyappatta Kireedatthin Kooraana Aanigalaal Parisuttha Sirasinil Atikkappatteerae Anbar Yesuvae Neer Parisuttha Rattham Sirasininroti Ozhukum Akkorak Kaatsiyinai Yaaraal Thaanggakkootiya? Endhan Yesu Devanae Thirukkarangkaalkal Vilaavininrum Thirusirasininrum Thiranthu Paaynthotum Jeeva Rattha Aarai Yaar Sakikkak Kootum? Thiru Sareeram Muzhuvathum Pirappattoraay Siluvaiyil Thongki Thuti Thutitthu Rattham Sinthum Naesarai Paaviyae Nee Nokkaayo