பாடல் #37138
கர்த்தரின் வழியில் கருத்தோடு
🔤 Karttharin Vazhiyil Karutthotu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் வழியில் கருத்தோடு நடந்தால் (2) சம்பூர்ண சந்தோஷமே - அல்லேலூயா உந்தனின் வார்த்தை என் கால்களின் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமே - அல்லேலூயா இடறல்கள் எனக்கில்லையே முன் பக்கம் சவுலின் சேனைகள் நெருக்க மறுபக்கம் மாகோன் வனத்தினில் தவித்தேன் வழியின்றி கலங்கி நின்றேன் ஏழை என் ஜெபத்தை யேகோவா நீர் கேட்டீர் (2) பெலிஸ்தரை எழும்பபண்ணி - அல்லேலூயா சவுலையே கலங்கடித்தீர் அழுகையின் பள்ளத்தாக்கினில் நடந்தேன் அழுதிட பெலனும் இல்லாமல் அழுதேன் தோழரும் எதிர்த்தனரே உமக்குள்ளே பெலனை பெற்றிட செய்தீர் (2) உம் வாக்கை நல்கினீரே - அல்லேலுாயா ஆ என்ன பேரின்பமே (2) பாசானின் தேச காளைகள் எதிர்க்க பந்த பாசங்களும் பரியாசம் செய்ய பல நேரம் பதறி நின்றேன் நான் நம்பும் தேவன் இன்னாரென்றறிந்தேன் (2) கர்த்தர் என் பட்சமுமே - அல்லேலூயா மானிடன் என்ன செய்வான் (2) கர்த்தரின் ஆவி எவ்விடம் உண்டோ விடுதலை ஜெயமும் அவ்விடம் உண்டே சாத்தானின் நுகமும் எங்கே அபிஷேகம் நுகத்தை முறித்திட செய்தீர் (2) மீட்டிடும் நாளுக்கென்றே - அல்லேலூயா முத்திரை உம் ஆவியே (2) ஆதியின் வார்த்தை மாமிசமாகி கிருபை சத்தியமும் நிறைந்தவராகி நமக்குள்ளே வாசம் செய்தார் ஏற்போர்கள் யாரும் இயேசுவின் சுதராய் (2) புத்திர சுவிகாரமாய் - அல்லேலூயா புது ஆவி எனக்களித்தார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Vazhiyil Karutthotu Natanthaal (2) Sampoorna Santhoshamae - Allaelooyaa Undhanin Vaartthai En Kaalkalin Theebamum Paathaikku Velicchamumae - Allaelooyaa Idaralkal Enakkillaiyae Mun Pakkam Savulin Saenaigal Nerukka Marubakkam Maakon Vanatthinil Thavitthaen Vazhiyinri Kalangki Ninraen Aezhai En Jebatthai Yaekovaa Neer Kaetteer (2) Pelistharai Ezhumbapanni - Allaelooyaa Savulaiyae Kalanggatittheer Azhukaiyin Pallatthaakkinil Natanthaen Azhuthida Pelanum Illaamal Azhuthaen Thozharum Ethirtthanarae Umakkullae Pelanai Perrida Seytheer (2) Um Vaakkai Nalkineerae - Allaeluாyaa Aa Enna Paerinbamae (2) Paasaanin Thaesa Kaalaigal Ethirkka Pandha Paasanggalum Pariyaasam Seyya Pala Naeram Pathari Ninraen Naan Nampum Devan Innaarendrarinthaen (2) Kartthar En Patsamumae - Allaelooyaa Maanidan Enna Seyvaan (2) Karttharin Aavi Evvidam Unto Vitudhalai Jeyamum Avvidam Untae Saatthaanin Nugamum Engkae Apishaegam Nugatthai Muritthida Seytheer (2) Meettitum Naalukkenrae - Allaelooyaa Mutthirai Um Aaviyae (2) Aathiyin Vaartthai Maamisamaaki Kirupai Satthiyamum Niraindhavaraaki Namakkullae Vaasam Seythaar Aerporkal Yaarum Yesuvin Sudharaay (2) Putthira Suvikaaramaay - Allaelooyaa Puthu Aavi Enakkalitthaar (2)