பாடல் #37119
இயேசுவின் ஊழியனே இயேசுவின்
🔤 Yesuvin Oozhiyanae Yesuvin
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் ஊழியனே இயேசுவின் ஊழியனே-2 ஊழியப் பாதையில் உபத்திரவமா ஊழியப் பாதையில் உபத்திரவமா இயேசுவின் ஊழியனே...ஒ... இயேசுவின் ஊழியனே உறவுகளை மறந்து உறக்கத்தையும் இழந்து ஊரு விட்டு ஊரு வந்து ஊழியம் செய்தாயே பசியும் பட்டினியும் பழக்கமாய் போனதால் பார்ப்பவருக்கு பாட்டும் பழமொழியானாயே-2 தங்க இடமில்லாமல் நீயும் தவித்தபொழுதும்கூட ஒ-2 தாகமாய் கர்த்தருக்கு ஊழியம் செய்தாயே-2 ஊழியம் ஒரு பக்கம் குடும்பம் மறுபக்கம் சுமை தாங்க முடியாமல் சோர்ந்து நீ போனாயே திரும்ப போய்விடலாம் என்று நீயும் நினைத்தாயே திரும்பாமல் திரும்பவும் ஊழியத்தை தொடர்ந்தாயே-2 எல்லாரும் துடைத்துப் போடும் அழுக்கை போலாகியும் நீ -2 ஒ.ஆவலாய் கர்த்தருக்கு ஊழியம் செய்தாயே-2 உன்னத தேவனுக்கு ஊழியம் செய்ததினால் பரலோக பிதாவும்உன்னை கண்டு மகிழ்ந்திடுவார் கர்த்தருக்காய் பாடுகளை நீயும் சகித்ததினால் அவரோடு கூட நீ ஆளுகை செய்திடுவாய்-2 உனக்கு உண்டான பலன் எல்லாம் உன்னதத்தில் தானே உண்டு-2 ஒ அழியும் ஆத்மாவை காப்பதே உன் தொண்டு-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Oozhiyanae Yesuvin Oozhiyanae-2 Oozhiyap Paathaiyil Ubatthiravamaa Oozhiyap Paathaiyil Ubatthiravamaa Yesuvin Oozhiyanae...o... Yesuvin Oozhiyanae Uravugalai Maranthu Urakkatthaiyum Izhanthu Ooru Vittu Ooru Vanthu Oozhiyam Seythaayae Pasiyum Pattiniyum Pazhakkamaay Ponathaal Paarppavarukku Paattum Pazhamozhiyaanaayae-2 Thangga Idamillaamal Neeyum Thavitthapozhuthumkooda O-2 Thaagamaay Karttharukku Oozhiyam Seythaayae-2 Oozhiyam Oru Pakkam Kutumbam Marubakkam Sumai Thaangga Mutiyaamal Sornthu Nee Ponaayae Thirumba Poyvidalaam Enru Neeyum Ninaitthaayae Thirumpaamal Thirumbavum Oozhiyatthai Thodarnthaayae-2 Ellaarum Thutaitthup Potum Azhukkai Polaakiyum Nee -2 O.aavalaay Karttharukku Oozhiyam Seythaayae-2 Unnatha Devanukku Oozhiyam Seythathinaal Paraloga Pithaavumunnai Kantu Makizhnthituvaar Karttharukkaay Paatugalai Neeyum Sakitthathinaal Avarotu Kooda Nee Aalukai Seythituvaay-2 Unakku Untaana Palan Ellaam Unnathatthil Thaanae Untu-2 O Azhiyum Aathmaavai Kaappathae Un Thontu-2