பாடல் #37077
புத்தாண்டு இன்று பிறந்தாச்சு
🎙 கிறிஸ்தவ பாடல்
புத்தாண்டு இன்று பிறந்தாச்சு இங்கு விழா கோலாகலம் தானே வரும் காலமே வளமாக்குமே புது வாழ்வு தானே--(2) Happy new year -(3) இனி ஜாலி ஜாலி தான் வருஷத்தை நன்மையாலே முடி சூட்டும் தேவனே வாழ்வில் எல்லாம் வளமாக்கும் ஆசியை தாருமே வானம் எங்கும் வர்ண ஜாலம் வாசல் எங்கும் இன்பமே இன்று போல என்றும் வாழ இதயங்கள் வாழ்த்துதே -(2) துதி பாடல் எங்கும் உண்டு ஆடிப்பாடும் கூட்டம் உண்டு சிட்டுபோல வட்டம் போடும் நண்பர்கள் கூட்டம் உண்டு