பாடல் #37073
நீ இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன்
🔤 Nee Itaivitaamal Aaraathikkum Devan
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன் உன்னை தப்புவிக்க வல்லவர் 1. அக்கினியில் நடக்கும் போதும் ஆறுகளை நீ கடக்கும் போதும் சோகமடையாதே - நீ சேதப்படுவதில்லை கர்த்தரே கன்மலையாய் இருந்து கர்த்தரே கோட்டையாக இருந்து பாதுகாத்திடுவார் - நீ பயப்படவேண்டாம் 2. பூமியும் நிலை மாறினாலும் மலைகள் நடுசமுத்திரத்தில் சாய்ந்தாலும் பயந்து போகாதே கர்த்தர் பாதுகாத்திடுவார் கர்த்தரே கன்மலையாய் இருந்து கர்த்தரே கோட்டையாக இருந்து பாதுகாத்திடுவார் - நீ பயப்படவேண்டாம் 3. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நீ நடந்திடுவாய் வலுசர்ப்பத்தை மிதிப்பாய் உந்தன் பாதம் கல்லில் படாமல் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்த தூதனை அனுப்பிடுவார் - நீ பயப்படவேண்டாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Itaivitaamal Aaraathikkum Devan Unnai Thappuvikka Vallavar 1. Akkiniyil Natakkum Pothum Aarugalai Nee Katakkum Pothum Sogamataiyaathae - Nee Saedhappatuvathillai Karttharae Kanmalaiyaay Irunthu Karttharae Kottaiyaaga Irunthu Paathukaatthituvaar - Nee Payappatavaentaam 2. Poomiyum Nilai Maarinaalum Malaigal Natusamutthiratthil Saaynthaalum Payanthu Pokaathae Kartthar Paathukaatthituvaar Karttharae Kanmalaiyaay Irunthu Karttharae Kottaiyaaga Irunthu Paathukaatthituvaar - Nee Payappatavaentaam 3. Singgatthin Maelum Paampin Maelum Nee Natanthituvaay Valusarppatthai Mithippaay Undhan Paadham Kallil Pataamal Unnaith Thanggal Kaigalil Aendha Thoodhanai Anuppituvaar - Nee Payappatavaentaam