பாடல் #3704
யார் யாரோ வாழ்விலே
🔤 Yaar Yaaro Vaazhvilae
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யார் யாரோ வாழ்விலே சிலுவையைக் கண்டீரோ சிலுவைக்காய் பணி செய்ய வாரீரோ? தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப பாசம் கொண்டு பின்னே வருவோன் யார்? என்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து சிலுவையை எடுத்து வருவோன் யார்? பாவம் உலகைப் பலமாக மூடுது பக்தர் பலர்கூட சோர்புற்றார் தீர்க்க தரிசனம் கூறியவர்கூட பின் வாங்கி இந்நாளில் போய்விட்டார் சீயோன் குமாரத்தி, சிந்தையில் வைத்துக்கொள் உன்னை அழைப்பது நானல்லோ வானமும் பூமியும் அதிலுள்ள யாவையும் அழகாய் அமைத்ததென் கரமல்லோ! உலகைப் பகைத்து, பாவத்தை வெறுத்து பரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார்? சிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை ஆசீர்வதிப்பதென் கடன் அல்லோ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaar Yaaro Vaazhvilae Siluvaiyaik Kanteero Siluvaikkaay Pani Seyya Vaareero? Thaesanggal Santhikka Thaevaiyai Nirappa Paasam Kontu Pinnae Varuvon Yaar? Ennaippol Thannaiyum Nitthamum Verutthu Siluvaiyai Etutthu Varuvon Yaar? Paavam Ulakaip Palamaaga Mootuthu Pakthar Palarkooda Sorpurraar Theerkka Tharisanam Kooriyavarkooda Pin Vaangki Innaalil Poyvittaar Seeyon Kumaaratthi, Sinthaiyil Vaitthukkol Unnai Azhaippathu Naanallo Vaanamum Poomiyum Athilulla Yaavaiyum Azhakaay Amaitthathen Karamallo! Ulakaip Pakaitthu, Paavatthai Verutthu Parisutthap Por Seyyach Selvon Yaar? Siluvaiyin Maenmaikkaay Sirumai Ataivorai Aaseervathippathen Katan Allo?