பாடல் #37035
குருசினில் கிறிஸ்துவின்
🔤 Kurusinil Kiristhuvin
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குருசினில் கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்படும் கோரக் காட்சியைப் பார் பாதகர்க்காகப் பாடுபடும் வேளைதனில் - 2 புது உடன்படிக்கையின் இரத்தம் பாவ மன்னிப்புக்காய்ச் சிந்தினாரே - 2 பாவிகளின் நேசர் இயேசு தாமே - 2 கெத்செமனே இல் கிறிஸ்து இயேசு இரத்தமதைப் பெருந்துளிகளாகச் - 2 சிந்தினாரே சீர்கெட்ட பாவிகட்காய் - 2 தீயர் தாடை ரோமம் பிடுங்கும் வேளை தூயர் தம் தூய முகத்தினின்று - 2 தூய்மையான இரத்தமதைத் தாம் சிந்தினார் - 2 வாரினால் அடித்துப் படைச்சால்போல் திரு சரீரம் கீறிக் கிழியும் வேளை - 2 கர்த்தர் தாமே திரு இரத்தம் தாம் சிந்தினார் - 2 முள்முடி சூட்டியே சிரசினில் மூங்கில் தடியால் அடிக்கும் வேளை - 2 மீட்பர் இயேசு திரு இரத்தம் தாம் சிந்தினார் - 2 திருப்பரங் கால்கள் ஆணிகளால் சிலுவையுடன் சேர்த்து அறையும் வேளை - 2 திரு இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தோடியது - 2 குருசினில் தொங்கும் கிறிஸ்துவின் விலாவினில் ஈட்டியால் குத்தும் வேளை - 2 மீந்த இரத்தமதை முழுதுமாகத் தாம் சிந்தினார் - 2 ஜீவ இரத்தமதைப் பானம் செய்வோர் நிலைத்து என்றென்றும் ஜீவனோடு- 2 சதாகாலமும் கிறிஸ்துவுடன் பிழைத்திருப்பார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kurusinil Kiristhuvin Rattham Sindhappatum Korak Kaatsiyaip Paar Paadhakarkkaagap Paatubatum Vaelaidhanil - 2 Puthu Udanbatikkaiyin Rattham Paava Mannippukkaaych Sinthinaarae - 2 Paavigalin Naesar Yesu Thaamae - 2 Kethsemanae Il Kiristhu Yesu Ratthamathaip Perunthuligalaagach - 2 Sinthinaarae Seerketta Paavigatkaay - 2 Theeyar Thaatai Romam Pitungkum Vaelai Thooyar Tham Thooya Mugatthininru - 2 Thooymaiyaana Ratthamathaith Thaam Sinthinaar - 2 Vaarinaal Atitthup Pataichsaalpol Thiru Sareeram Keerik Kizhiyum Vaelai - 2 Kartthar Thaamae Thiru Rattham Thaam Sinthinaar - 2 Mulmuti Soottiyae Sirasinil Moongkil Thatiyaal Atikkum Vaelai - 2 Meetpar Yesu Thiru Rattham Thaam Sinthinaar - 2 Thirupparang Kaalkal Aanigalaal Siluvaiyudan Saertthu Araiyum Vaelai - 2 Thiru Rattham Peerittup Paaynthotiyathu - 2 Kurusinil Thongkum Kiristhuvin Vilaavinil Eettiyaal Kutthum Vaelai - 2 Meendha Ratthamathai Muzhuthumaagath Thaam Sinthinaar - 2 Jeeva Ratthamathaip Paanam Seyvor Nilaitthu Enrenrum Jeevanotu- 2 Sathaakaalamum Kiristhuvudan Pizhaitthiruppaar - 2