பாடல் #37033
தேவையானது ஒன்று
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
தேவையானது ஒன்று அது உந்தன் சமூகமே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானைய்யா துதித்திடுவேன் ஜெபித்திடுவேன் ஜெயத்தை பெற்றிடுவேன் 1. தாயின் கருவில் அறிந்தவரே தாங்கி நடத்திடுவார் தள்ளாட விடமாட்டார் தளராதே என் மனமே 2. நேற்றும் இன்றும் மாறாதவர் எனக்கு உதவிடுவார் வானமும் பூமியும் மாறும் அவர் வாக்கு மாறாதவர் 3. கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிட்டேன் கவலைப்பட மாட்டேன் கர்த்தர் பார்த்துக்கொள்வார் - அவர் கைவிடவே மாட்டார் 4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மை தொழுதிடுவேன் நன்மையும் கிருபைகளும் என்னை என்றும் பின்தொடரும்