பாடல் #37032
வல்லமையாய் பிரகாசிக்கும்
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
வல்லமையாய் பிரகாசிக்கும் இயேசுவே நீர் வல்லமையோடு எழுந்தருள வேண்டுமே 1. வானமும் பூமியும் மாறிப்போகும் உம் வார்த்தைகள் மாறாது சூரியன் சந்திரன் மறையும் உம் வார்த்தைகள் மறையாது 2. நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கிருபையும் சத்தியமும் என்னைக் காக்கும் நான் உயிருள்ள நாளெல்லாம் 3. பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தால் அல்ல உம் ஆவியினாலே ஆகுமே மாமிசம் ஒன்றுக்கும் உதவாது உம் ஆவியோ உயிர்ப்பிக்குமே