பாடல் #37028
காலை நேரமே கல்வாரி சிநேகமே
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
காலை நேரமே கல்வாரி சிநேகமே தேடி வந்தேனே காத்திருப்பேனே 1. எப்பொழுது விடியும் என்று விடியலுக்காய் காத்திருக்கும் ஜாமக்காரனைப் போல் என்னுடைய ஆத்துமா மிகவும் அதிகமாய் உமக்காக ஏங்குகின்றது தெய்வமே தெய்வமே உமக்காக ஏங்குகின்றது 2. அந்தி சந்தி மத்தியான வேலைக்காய் காத்திருக்கும் தாவீதைப் போல் என்னுடைய ஆத்துமா மிகவும் அதிகமாய் உமக்காக ஏங்குகின்றது தெய்வமே தெய்வமே உமக்காக ஏங்குகின்றது