பாடல் #37019
ஆசீர்வாத தகப்பனே நன்றி
🔤 Aaseervaadha Thakappanae Nanri
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வாத தகப்பனே நன்றி என்னை அனுதினமும் நடத்துபவரே நன்றி தந்திடுவார் தந்திடுவார் நிறைவாய் - நான் பெற்றிடுவேன் பெற்றிடுவேன் மனநிறைவாய் 1. ஒன்றுமில்லா ஆபிரகாமை ஆபிரகாமே, ஆபிரகாமே என்று அழைத்து நீ உன் இனத்தையும் உன் தேசத்தையும் விட்டு புறப்பட்டு போ என்றாரே நான் உனக்கு காண்பிக்கும் தேசம் நீ கால் மிதிக்க வேண்டும் நீ கால் மிதிக்கும் தேசம் அது கானானின் தேசம் பாலும் தேனும் ஓடும் தேசம் பரனே என்ன சந்தோஷம் இவர் ஆபிரகாமின் தேவன் நம்மை ஆசீர்வதிக்கும் தெய்வம் நிறைவாய் நடத்திடுவாரே மனநிறைவாய் தந்திடுவாரே 2. சிறியவனை எளியவனை குப்பையிலிருந்து, புழுதியிலிருந்து எடுத்தவரே அவனை ராஜாக்களோடும், பிரபுக்களோடும் அமரச்செய்பவரே உம்மைப்போல எவரும் என்னை உயர்த்த முடியாதைய்யா எனக்கு எட்டாததை என்னில் செய்வீரைய்யா ( 2 ) தாழ்மையுள்ளவனை உயர்த்தி தரணியிலே மகிமைப்படுத்தி இவர் தாவீதின் தேவன் எனக்கு தயை செய்யும் தெய்வம் தலையை உயர்த்திடுவாரே அதை நிமிரச் செய்திடுவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervaadha Thakappanae Nanri Ennai Anuthinamum Natatthubavarae Nanri Thanthituvaar Thanthituvaar Niraivaay - Naan Perrituvaen Perrituvaen Mananiraivaay 1. Onrumillaa Aapirakaamai Aapirakaamae, Aapirakaamae Enru Azhaitthu Nee Un Inatthaiyum Un Thaesatthaiyum Vittu Purappattu Po Enraarae Naan Unakku Kaanpikkum Thaesam Nee Kaal Mithikka Vaentum Nee Kaal Mithikkum Thaesam Athu Kaanaanin Thaesam Paalum Thaenum Otum Thaesam Paranae Enna Santhosham Ivar Aapirakaamin Devan Nammai Aaseervathikkum Theyvam Niraivaay Natatthituvaarae Mananiraivaay Thanthituvaarae 2. Siriyavanai Eliyavanai Kuppaiyilirunthu, Puzhuthiyilirunthu Etutthavarae Avanai Raajaakkalotum, Pirapukkalotum Amarachseypavarae Ummaippola Evarum Ennai Uyarttha Mutiyaathaiyyaa Enakku Ettaadhathai Ennil Seyveeraiyyaa ( 2 ) Thaazhmaiyullavanai Uyartthi Tharaniyilae Makimaippatutthi Ivar Thaaveethin Devan Enakku Thayai Seyyum Theyvam Thalaiyai Uyartthituvaarae Athai Nimirach Seythituvaarae