பாடல் #37018
பரிசுத்தர் இயேசு
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
பரிசுத்தர் இயேசு (2) என்னுள் வாழ்கிறார் அவர் எனக்குள் வாழ்கிறார் 1. கிறிஸ்துவோடு கூட சிலுவையில் அறையுண்டேன் இனி நான் அல்ல என்னில் இயேசு வாழ்கிறார் 2. கிறிஸ்துவின் அன்பைவிட்டு ஒன்றும் என்னை பிரிக்காது காரணம் நான் அல்ல என்னில் இயேசு வாழ்வதால் 3. என் ஜீவனைவிட அவர் கிருபை மேலானது என் ஜீவனின் அதிபதியாய் என்னில் இயேசு வாழ்கிறார் 4. ஜீவனேயானாலும் மரணமேயானாலும் என் ஜீவன் இயேசுவுக்கே எனதெல்லாம் இயேசுவுக்கே