பாடல் #37000
எந்நாளுமே எப்போதுமே
🔤 Ennaalumae Eppothumae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்நாளுமே எப்போதுமே எண்ணுக்கடங்கா நன்மைகள் செய்த இயேசுவையே துதிப்பாய் வாழ்த்துவேன் உம்மையே போற்றுவேன் என்றுமே 1. கடந்த நாளெல்லாம் காத்து கண்ணின் மணிபோல பார்த்து வார்த்தையால் தினம் என்னை தேற்றி என்னை வாழ வைத்த வல்ல தெய்வமே எனக்கு ஜீவன் தந்த ஜீவ நீருற்றே 2. மேகத்தைப் போல் எந்தன் வாழ்க்கை கடந்துபோவது போல் இருக்க கிருபையின் ஆவியை ஊற்றி என்னை இரட்சித்தீர் இலவசமாய் அதைப் பாடுகிறேன் பரவசமாய் 3. ஒன்றுக்கும் உதவாத என்னை - மகா மேன்மையான சந்ததியாய் மாற்றி என் பெயரை பெருமைப்படுத்தி என்னைப் பெருகச் செய்த பெரியவரே மனத்தாழ்மையிலே சிறந்தவரே 4. ஒன்றல்ல ஆயிரம் வரட்டும் பத்தல்ல பதினாயிரம் வரட்டும் ராஜாதி ராஜா நீர் இருக்க நான் பயப்படேன் தரணியிலே அதை பாடுகிறேன் பூமியிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaalumae Eppothumae Ennukkatangkaa Nanmaigal Seytha Yesuvaiyae Thuthippaay Vaazhtthuvaen Ummaiyae Porruvaen Enrumae 1. Katandha Naalellaam Kaatthu Kannin Manipola Paartthu Vaartthaiyaal Thinam Ennai Thaerri Ennai Vaazha Vaittha Valla Theyvamae Enakku Jeevan Thandha Jeeva Neerurrae 2. Maegatthaip Pol Endhan Vaazhkkai Katanthupovathu Pol Irukka Kirupaiyin Aaviyai Oorri Ennai Iratsittheer Ilavasamaay Athaip Paatukiraen Paravasamaay 3. Onrukkum Udhavaadha Ennai - Makaa Maenmaiyaana Sandhathiyaay Maarri En Peyarai Perumaippatutthi Ennaip Perugach Seytha Periyavarae Manatthaazhmaiyilae Sirandhavarae 4. Ondralla Aayiram Varattum Patthalla Pathinaayiram Varattum Raajaathi Raajaa Neer Irukka Naan Payappataen Tharaniyilae Athai Paatukiraen Poomiyilae