பாடல் #36992
இம்மட்டும் காத்த இம்மானுவேலா
🔤 Immattum Kaattha Immaanuvaelaa
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மட்டும் காத்த இம்மானுவேலா எப்படி நன்றி சொல்வேன் - நான் எப்படி நன்றி சொல்வேன் 1. மனிதன் கைவிட்ட நேரத்தில் நீரோ எனை கரம் பிடித்தீரே மனிதன் எனை மறந்த நேரத்தில் நீரோ மறவாதிருந்தீரே உம் அன்பே பெரியது உம் இரக்கமே பெரியது உம் தயவே பெரியது அவை என்றும் மாறாதது மறப்பதில்லை ( 2 ) ஒரு மனிதனைபோல் நீர் அல்ல 2. உற்றார் உதறின நேரத்தில் உண்மையாய் உம் அன்பை உணர்ந்தேனே மெய்யாய் தோன்றின மனிதர்கள் பொய்யாய் போனதை புரிந்தேனே 3. நீர் எனக்கு செய்த உபகாரங்கள் உயிருள்ள நாளெல்லாம் நினைப்பேனே என் நினைவுள்ள நாளெல்லாம் என் வாழ்வில் என் தாழ்வில் நினைத்தவரை நினைப்பேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immattum Kaattha Immaanuvaelaa Eppati Nanri Solvaen - Naan Eppati Nanri Solvaen 1. Manidhan Kaivitta Naeratthil Neero Enai Karam Pitittheerae Manidhan Enai Marandha Naeratthil Neero Maravaathiruntheerae Um Anpae Periyathu Um Irakkamae Periyathu Um Thayavae Periyathu Avai Enrum Maaraadhathu Marappathillai ( 2 ) Oru Manidhanaipol Neer Alla 2. Urraar Udharina Naeratthil Unmaiyaay Um Anpai Unarnthaenae Meyyaay Thonrina Manidharkal Poyyaay Ponathai Purinthaenae 3. Neer Enakku Seytha Ubakaaranggal Uyirulla Naalellaam Ninaippaenae En Ninaivulla Naalellaam En Vaazhvil En Thaazhvil Ninaitthavarai Ninaippaenae