பாடல் #36991
இருளில் உள்ளதை அறிகிற
🔤 Irulil Ullathai Arikira
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருளில் உள்ளதை அறிகிற தேவனை ஆராதிப்பேன் மனிதனின் நினைவினை அறிகிற தேவனை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - 3 1. மனிதனோ அவன் முகத்தை பார்க்கிறான் தேவனோ அவன் இதயத்தைப் பார்க்கிறார் பாதாளம் அவர் பார்வைக்கு பிரத்தியட்சமாய் இருக்க மனிதனின் இதயமோ அதினிலும் வெளியரங்கமாய் இருக்கும் 2. இருளில் சொன்னதை வெளிச்சம் கேட்டுவிடும் அறையில் சொன்னதோ வீட்டின் மேலே கூறப்படும் வெளியாக்கப்படாத எந்த மறைபொருளும் இல்லை அறியப்படாத எந்த இரகசியமும் இல்லை 3. பாவம் செய்தவன் அதை மறைக்கப் பார்க்கிறான் தீமை செய்தவன் அதை ஒளிக்கப் பார்க்கிறான் சகலத்தையும் படைத்தவர் அதை அறியாதிருப்பது எப்படி? எல்லாம் அறிந்தவர் அவர் எல்லாம் அறிந்தவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irulil Ullathai Arikira Devanai Aaraathippaen Manidhanin Ninaivinai Arikira Devanai Aaraathippaen Aaraathippaen - 3 1. Manidhano Avan Mugatthai Paarkkiraan Devano Avan Idhayatthaip Paarkkiraar Paathaalam Avar Paarvaikku Piratthiyatsamaay Irukka Manidhanin Idhayamo Athinilum Veliyaranggamaay Irukkum 2. Irulil Sonnathai Veliccham Kaettuvitum Araiyil Sonnatho Veettin Maelae Koorappatum Veliyaakkappataadha Endha Maraiporulum Illai Ariyappataadha Endha Irakasiyamum Illai 3. Paavam Seythavan Athai Maraikkap Paarkkiraan Theemai Seythavan Athai Olikkap Paarkkiraan Sakalatthaiyum Pataitthavar Athai Ariyaathiruppathu Eppati? Ellaam Arindhavar Avar Ellaam Arindhavar