பாடல் #36985
என் பிரியமே ரூபவதியே
🔤 En Piriyamae Roobavathiyae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பிரியமே ரூபவதியே என அழைத்திடும் இவர் யாரோ இவர் ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் 1. தலை தங்கமாய் இருக்குது தலைமயிர் சுருளாயிருக்குது கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய் தங்கும் புறாக்கண்களைப் போலவே இருக்குது - கண்கள் இவர் யாரோ - 4 இவர் ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் 2. நிறம் வெண்மையும் சிகப்புமாய் அவர் வாய் மிகவும் மதுரமாய் கன்னம் கந்தக வர்க்கப் பாத்திகள் போல வாசனையுள்ள புஷ்பமாய் இருக்குது - கன்னம் இவர் யாரோ - 4 இவர் ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் 3. கரங்கள் படிக பச்சையாய் பதிந்த பொன் வளையல்களாய் அங்கம் இந்திர நீல இரத்தினங்கள் இழைத்த யானை தந்தமாய் இருக்குது பிரகாச தந்தமாய் இருக்குது இவர் யாரோ - 4 இவர் ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் 4. ரூபம் லீபனோன் போலவே கேதுரு மரத்தைப் போலவே கால்கள் பசும்பொன் ஆதாரங்களின் மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்போலவே இருக்குது கால்கள் வெள்ளைக்கல் தூண்போலவே இருக்குது இவர் யாரோ - 4 இவர் ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Piriyamae Roobavathiyae Ena Azhaitthitum Ivar Yaaro Ivar Aayiram Pathinaayiranggalil Sirandhavar 1. Thalai Thanggamaay Irukkuthu Thalaimayir Surulaayirukkuthu Kankal Thanneer Niraindha Nathigalin Oramaay Thangkum Puraakkankalaip Polavae Irukkuthu - Kankal Ivar Yaaro - 4 Ivar Aayiram Pathinaayiranggalil Sirandhavar 2. Niram Venmaiyum Sigappumaay Avar Vaay Migavum Mathuramaay Kannam Kandhaka Varkkap Paatthigal Pola Vaasanaiyulla Pushpamaay Irukkuthu - Kannam Ivar Yaaro - 4 Ivar Aayiram Pathinaayiranggalil Sirandhavar 3. Karanggal Patiga Pachsaiyaay Pathindha Pon Valaiyalkalaay Anggam Inthira Neela Ratthinanggal Izhaittha Yaanai Thandhamaay Irukkuthu Pirakaasa Thandhamaay Irukkuthu Ivar Yaaro - 4 Ivar Aayiram Pathinaayiranggalil Sirandhavar 4. Roobam Leebanon Polavae Kaethuru Maratthaip Polavae Kaalkal Pasumpon Aathaaranggalin Mael Nirkira Vellaikkal Thoonpolavae Irukkuthu Kaalkal Vellaikkal Thoonpolavae Irukkuthu Ivar Yaaro - 4 Ivar Aayiram Pathinaayiranggalil Sirandhavar