பாடல் #36976
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்
🔤 Kartthar En Maeypparaayirukkiraar
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடைவதில்லை 1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி என் ஆத்துமாவைத் தேற்றி என்னை நீதியின் பாதையில் நடத்துகிறார் 2. மரண இருளில் நடந்திட - அதை தேவ பெலத்தால் கடந்திட என் தேவன் கூட இருந்து தமது கோலாலும், தடியாலும் தேற்றிடுவார் 3. சத்துரு முன்பாக பந்தி எனக்கு ஆயத்தப்படுத்தி என் பாத்திரம் நிரம்பி வழிய என்னை எண்ணெயால் அபிஷேகம் செய்திடுவார் 4. நான் ஜீவிக்கும் நாட்களிலெல்லாம் அதிசயமாய் என்னை நடத்தி என்னை நன்மை கிருபை தொடர கர்த்தரின் வீட்டிலே நிலைத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Maeypparaayirukkiraar Naan Thaazhchsiyataivathillai 1. Pullulla Idanggalil Maeytthu Amarndha Thanneerantai Natatthi En Aatthumaavaith Thaerri Ennai Neethiyin Paathaiyil Natatthukiraar 2. Marana Irulil Natanthida - Athai Thaeva Pelatthaal Katanthida En Devan Kooda Irunthu Thamathu Kolaalum, Thatiyaalum Thaerrituvaar 3. Satthuru Munpaaga Panthi Enakku Aayatthappatutthi En Paatthiram Nirampi Vazhiya Ennai Enneyaal Apishaegam Seythituvaar 4. Naan Jeevikkum Naatkalilellaam Athisayamaay Ennai Natatthi Ennai Nanmai Kirupai Thodara Karttharin Veettilae Nilaitthiruppaen