பாடல் #36971
பரிசுத்த பிதாவே
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
பரிசுத்த பிதாவே பரிசுத்த இயேசுவே பரிசுத்த ஆவியானவரே வானத்திலும் பூமியிலும் உம் நாமம் அல்லாமல் வேறொரு நாமம் இல்லையே (2) 1. மாம்சமான யாவருக்கும் நீர் தேவன் மாம்சமான யாவரையும் நீர் அறிவீர் உம்மைபோல வேறொரு தேவன் இல்லையே உம்மை நாங்கள் ஆராதித்திட 2. ஈரைந்து மாதங்களில் என்னை உண்டாக்கி ஈசனே உம் தயவால் என்னை நடத்தினீர் உம்மைபோல வேறொரு குயவன் இல்லையே உம்மைபோல என்னை வனைந்திட 3. ஆசாபின் ஆசானாகிய தாவீதை அரசாளும் அரசனாக நீர் மாற்றினீர் உம்மைபோல வேறொரு ராஜா இல்லையே எந்நாளும் என்னை உயர்த்திட