பாடல் #36970
நீ விசுவாசித்தால் தேவனின்
🔤 Nee Visuvaasitthaal Devanin
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய் மனிதனால் கூடாதது தேவனால் எல்லாம் கூடுமே 1. நாலு நாட்களாய் நாறிப்போன லாசரு நாதன் இயேசுவின் வார்த்தையினாலே பிழைத்தான் நாலு நாட்களோ நானூறு வருடமோ அவரின் வார்த்தையால் எல்லாம் கூடும் 2. நானூறு வருடமாய் ஆபிரகாமின் சந்ததி பார்வோனின் கையிலே அடிமையாகவே இருந்தனர் ஒரே இரவிலே தம் ஓங்கிய புயத்தால் தம் வாக்குத்தத்தத்தை அவர் நிறைவேற்றினார் 3. பதினெட்டு வருடமாய் கூனியாகவே இருந்தவள் பரிசுத்த இயேசுவின் தொடுதலினாலே நிமிர்ந்தாள் ஆபிரகாமின் குமாரத்தியாய் அன்று இருந்தவள் அன்றே நிமிர்ந்தாள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Visuvaasitthaal Devanin Makimaiyai Kaanpaay Manidhanaal Kootaadhathu Devanaal Ellaam Kootumae 1. Naalu Naatkalaay Naarippona Laasaru Naadhan Yesuvin Vaartthaiyinaalae Pizhaitthaan Naalu Naatkalo Naanooru Varudamo Avarin Vaartthaiyaal Ellaam Kootum 2. Naanooru Varudamaay Aapirakaamin Sandhathi Paarvonin Kaiyilae Atimaiyaagavae Irundhanar Orae Iravilae Tham Ongkiya Puyatthaal Tham Vaakkutthatthatthai Avar Niraivaerrinaar 3. Pathinettu Varudamaay Kooniyaagavae Irundhaval Parisuttha Yesuvin Thotudhalinaalae Nimirnthaal Aapirakaamin Kumaaratthiyaay Anru Irundhaval Anrae Nimirnthaal