பாடல் #36962
நான் வீணாக ஓடினதும்
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
நான் வீணாக ஓடினதும் பிரயாசப்பட்டதும் இல்லை இல்லை இல்லை 1. கிறிஸ்துவுக்குள் பட்ட பிரயாசம் கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்துதே கிறிஸ்துவுக்குள் நிறைந்த விசுவாசம் கிறிஸ்துவின் கிருபையினால் பெருகுதே 2. கிறிஸ்துவுக்குள் நிலைத்து நீ இருந்தால் கிறிஸ்துவின் கனிகளையே தந்திடுவாய் கிறிஸ்துவின் ஆவியிலே நிறைந்திருந்தால் கிறிஸ்துவைப் போலவே நீ மாறிடுவாய் 3. கிறிஸ்துவின் பாடுகளை நீ சுமந்தால் கிறிஸ்துவின் ஆளுகையில் நீ இருப்பாய் கிறிஸ்துவுக்காய் எதையும் நீ சகித்தால் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் சுகித்திருப்பாய் 4. கிறிஸ்துவை ஆதாயப்படுத்திடவே உலகத்தின் மேன்மைகளை வெறுக்கிறேன் கிறிஸ்துவுக்குள் எதற்காய் பிடிக்கப்பட்டேனே அதையே ஆசையாக தொடருகிறேன்