பாடல் #36949
சகலத்தையும் செய்து முடிக்கும்
🔤 Sakalatthaiyum Seythu Mutikkum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சகலத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர் எனக்குள்ளே நீர் செய்ய நினைத்தது தடைபடாது நீர் செய்ய நினைத்தது எதுவும் தடைபடாது 1. கூட்டத்திலே குஷ்டரோகி ஒருவன் கூனி குருகிப் போயி வந்தான் உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்கும் என்று சொன்னானே நீர் சுத்தமாகு என்று சொன்னீரே 2. 38 வருட வியாதியில் ஒருவன் பெதஸ்தா குளத்தருகே இருந்தான் சொஸ்தமாக வேண்டுமா என்றீரே சொஸ்தமாக்கும் என்று சொன்னானே நீர் சொஸ்தமாகு என்று சொன்னீரே 3. பிறவி குருடனான ஒருவன் வழியிலே விழியிழந்து நின்றான் ஆண்டவரே பார்வையடைய என்னை தொட்டு சுகமாக்கும் என்றானே நீர் தொட்டு சுகமாக்கிச் சென்றீரே 4. சோதனையை சகித்து வந்த யோபு அதை பொறுமையாய் பொறுத்திருந்து வென்றான் தேவனின் சித்தத்தை அறிந்து மற்றதையெல்லாம் மறந்தானே தேவ சித்தத்தையெல்லாம் செய்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sakalatthaiyum Seythu Mutikkum Aartral Ullavar Enakkullae Neer Seyya Ninaitthathu Thataibataathu Neer Seyya Ninaitthathu Ethuvum Thataibataathu 1. Koottatthilae Kushtaroki Oruvan Kooni Kurukip Poyi Vanthaan Umakku Sitthamaanaal Ennai Sutthamaakkum Enru Sonnaanae Neer Sutthamaaku Enru Sonneerae 2. 38 Varuda Viyaathiyil Oruvan Pedhasthaa Kulattharukae Irunthaan Sosthamaaga Vaentumaa Enreerae Sosthamaakkum Enru Sonnaanae Neer Sosthamaaku Enru Sonneerae 3. Piravi Kurudanaana Oruvan Vazhiyilae Vizhiyizhanthu Ninraan Aandavarae Paarvaiyataiya Ennai Thottu Sugamaakkum Enraanae Neer Thottu Sugamaakkich Senreerae 4. Sodhanaiyai Sakitthu Vandha Yopu Athai Porumaiyaay Porutthirunthu Venraan Devanin Sitthatthai Arinthu Martrathaiyellaam Maranthaanae Thaeva Sitthatthaiyellaam Seythaarae