பாடல் #36943
என் தேவனுடைய ஆலயத்தில்
🔤 En Devanutaiya Aalayatthil
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனுடைய ஆலயத்தில் நான் பச்சையானதொரு ஒலிவமரம் என் இலைகள் உதிர்வதில்லை நான் அசைக்கப்படுவதில்லை 1. என் தலையை (எண்ணெயினால்) - 2 அபிஷேகம் செய்திருக்கிறார் என் தலை குனியாது ஒரு நன்மை குறையாது பச்சையான ஒலிவமரம் நானே 2. என் கொம்பை காண்டாமிருகக் கொம்பைபோல் என்றென்றும் உயர்த்தி வருகிறார் புது எண்ணெய் அபிஷேகம் தினம் என்னை நிரப்புது பச்சையான ஒலிவமரம் நானே 3. என் கர்த்தர் உத்தமரென்று விளங்கும்படி நான் முதிர்வயதிலும் கனிகொடுப்பேனே என் கனிகள் குறையாது அதின் ருசியும் குறையாது பச்சையான ஒலிவமரம் நானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanutaiya Aalayatthil Naan Pachsaiyaanathoru Olivamaram En Ilaigal Uthirvathillai Naan Asaikkappatuvathillai 1. En Thalaiyai (enneyinaal) - 2 Apishaegam Seythirukkiraar En Thalai Kuniyaathu Oru Nanmai Kuraiyaathu Pachsaiyaana Olivamaram Naanae 2. En Kompai Kaantaamirugak Kompaipol Enrenrum Uyartthi Varukiraar Puthu Enney Apishaegam Thinam Ennai Nirapputhu Pachsaiyaana Olivamaram Naanae 3. En Kartthar Utthamarenru Vilangkumbati Naan Muthirvayathilum Kanikotuppaenae En Kanigal Kuraiyaathu Athin Rusiyum Kuraiyaathu Pachsaiyaana Olivamaram Naanae