பாடல் #36942
உன் விழியிலே அவள் வழியில்
🔤 Un Vizhiyilae Aval Vazhiyil
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் விழியிலே அவள் வழியில் செல்லாதே அவள் சாவிலும் அதிக கசப்புள்ளவளாம் மறந்து போகாதே அவள் (உலகம்) அழகில் மயங்கித் திரியாதே 1. பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும் எண்ணெயிலும் மிருதுவாய் அவள் வாய்தான் காணப்படும் அவள் செய்கையின் முடிவோ எட்டியை போல் கசப்பு அது இருபுற கருக்குள்ள கூர்மையானது 2. அவளது காலடிகள் மரணத்தை நோக்குது அவளது நடைகளெல்லாம் பாதாளத்தைப் பற்றுது நீ ஜீவ மார்க்கத்தைச் சிந்திக்காதபடி அவள் நடைகளோ மாறி மாறி மாறுபடும் 3. ஆதலால் என் மகனே (ளே) என் வார்த்தைக்கு செவிகொடு உன் இதயத்தில் இடம்கொடு புதிய மனிதனாய் மாறிவிடு அவள் வீட்டு வாசலை கிட்டிச் சேராதே ஜெப வீட்டின் வாசலை விட்டு ஓடாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Vizhiyilae Aval Vazhiyil Sellaathae Aval Saavilum Athiga Kasappullavalaam Maranthu Pokaathae Aval (ulakam) Azhakil Mayangkith Thiriyaathae 1. Parasthireeyin Udhatugal Thaenkootupol Ozhukum Enneyilum Miruthuvaay Aval Vaaythaan Kaanappatum Aval Seykaiyin Mutivo Ettiyai Pol Kasappu Athu Irupura Karukkulla Koormaiyaanathu 2. Avalathu Kaalatigal Maranatthai Nokkuthu Avalathu Nataigalellaam Paathaalatthaip Parruthu Nee Jeeva Maarkkatthaich Sinthikkaadhapati Aval Nataigalo Maari Maari Maarubatum 3. Aadhalaal En Makanae (lae) En Vaartthaikku Sevikotu Un Idhayatthil Idamkotu Puthiya Manidhanaay Maarivitu Aval Veettu Vaasalai Kittich Saeraathae Jeba Veettin Vaasalai Vittu Otaathae