பாடல் #36925
பரிசுத்த வேதாகமம்
🔤 Parisuttha Vaethaagamam
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த வேதாகமம் என்னை பரிசுத்தப்படுத்துது என் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதிலும் அது பரிசுத்தத்தை கொண்டு செல்லுது 1. எந்த பாவியும் எந்த மனிதனும் எந்த நிலையிலும் அவன் இருந்தால் அவன் பரிசுத்த தேவனை தேடி வருகையில் தான் பாவி என்பதை உணர்ந்து கொள்கையில் அவன் பாவம் போக்க சாபம் நீக்கி அவனை பரிசுத்தப்படுத்தும் வேத வசனமே அந்த பாவியின் வாழ்வில் அதுவே கீதமே 2. வேத வசனமே அதுவே ஜீவ வசனமே அதைக் (அதையே) கண்டுகொள்ளுவேன் (அண்டிக்கொள்ளுவேன்) அதுவே இரவும் பகலும் என் தியானமே என் தாகத்திற்கு ஏற்ற பானமே என் பாவம் நீக்கி சாபம் போக்க என்னை பரிசுத்தப்படுத்தும் பரிசுத்த வேதமே இந்த பாவ உலகினில் அதுவே போதுமே 3. வேத வசனங்கள் சாரம் நிறைந்தது மிக இலகுவான பாரம் நிறைந்தது இந்த உலகத்தின் இருள் நீங்கிட வேத வசனத்தின் அருள் பொங்கிட தேவ பாதம் அமர்ந்து ஆவியில் நிறைந்து தேவ சத்தம் கேட்டு சித்தம் செய்திடுவேன் தேவ ராஜ்ஜிய வாசியாய் பூமியில் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Vaethaagamam Ennai Parisutthappatutthuthu En Aavi Aatthumaa Sareeram Muzhuvathilum Athu Parisutthatthai Kontu Selluthu 1. Endha Paaviyum Endha Manidhanum Endha Nilaiyilum Avan Irunthaal Avan Parisuttha Devanai Thaeti Varukaiyil Thaan Paavi Enbathai Unarnthu Kolkaiyil Avan Paavam Pokka Saabam Neekki Avanai Parisutthappatutthum Vaedha Vasanamae Andha Paaviyin Vaazhvil Athuvae Keedhamae 2. Vaedha Vasanamae Athuvae Jeeva Vasanamae Athaik (athaiyae) Kantukolluvaen (antikkolluvaen) Athuvae Iravum Pakalum En Thiyaanamae En Thaagatthirku Aertra Paanamae En Paavam Neekki Saabam Pokka Ennai Parisutthappatutthum Parisuttha Vaedhamae Indha Paava Ulakinil Athuvae Pothumae 3. Vaedha Vasananggal Saaram Niraindhathu Miga Ilakuvaana Paaram Niraindhathu Indha Ulakatthin Irul Neengkida Vaedha Vasanatthin Arul Pongkida Thaeva Paadham Amarnthu Aaviyil Nirainthu Thaeva Sattham Kaettu Sittham Seythituvaen Thaeva Raajjiya Vaasiyaay Poomiyil Vaazhnthituvaen