பாடல் #3689
யாரினும் மேலான அன்பர் மா நேசரே
🔤 Yaarinum Maelaana Anbar Maa Naesarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யாரினும் மேலான அன்பர் மா நேசரே! தாயைப் பார்க்க நல்ல நண்பர் மா நேசரே! மற்ற நேசர் விட்டுப் போவார் நேசித்தாலும் கோபங் கொள்வார் யேசுவோ என்றென்றும் விடார் மா நேசரே! 2. என்னைத் தேடி சுத்தம் செய்தார் மாநேசரே பற்றிக்கொண்ட என்னை விடார் மா நேசரே இன்றும் என்றும் அவர் காப்பார் பற்றினோரை மீட்டுக் கொள்வார் துன்ப நாளில் தேற்றல் செய்வார் மாநேசரே! 3. நெஞ்சே இதைத்தியானம் பண்ணு மாநேசரே அன்பையே விடாமல் பேணு மா நேசரே! எந்தத் துன்பம் வந்தும் நில்லு நேரே ஜீவபாதை செல்லு யேசுவாலே யாவும் வெல்லு மா நேசரே! 4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம் மாநேசரே! சோர்வுற்றாலும் வீரம் கொள்வோம் மாநேசரே கொண்ட நோக்கம் சித்தி செய்வார் நம்மை அவர் சேர்த்துக் கொள்வார் மோட்ச நன்மை யாவும் ஈவார் மா நேசரே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaarinum Maelaana Anbar Maa Naesarae! Thaayaip Paarkka Nalla Nanpar Maa Naesarae! Martra Naesar Vittup Povaar Naesitthaalum Kobang Kolvaar Yaesuvo Enrenrum Vitaar Maa Naesarae! 2. Ennaith Thaeti Suttham Seythaar Maanaesarae Parrikkonda Ennai Vitaar Maa Naesarae Inrum Enrum Avar Kaappaar Parrinorai Meettuk Kolvaar Thunba Naalil Thaertral Seyvaar Maanaesarae! 3. Nenjsae Ithaitthiyaanam Pannu Maanaesarae Anpaiyae Vitaamal Paenu Maa Naesarae! Endhath Thunbam Vanthum Nillu Naerae Jeevapaathai Sellu Yaesuvaalae Yaavum Vellu Maa Naesarae! 4. Enrenraikkum Keertthi Solvom Maanaesarae! Sorvurraalum Veeram Kolvom Maanaesarae Konda Nokkam Sitthi Seyvaar Nammai Avar Saertthuk Kolvaar Motsa Nanmai Yaavum Eevaar Maa Naesarae!