பாடல் #36877
அலைக்கடல் மோதும் போது
🔤 Alaikkatal Mothum Pothu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அலைக்கடல் மோதும் போது உந்தன் படகு சாயும் போது உன் கூக்குரல் கேட்க்கும் போது உன் பக்கம் வருகிறார் அவரே நம் இரட்சகர் அவரே நம் புகலிடம் அவரே நம் நங்கூரம் அவர் இயேசு பெருங்காற்றும் கடலும் உன்னை அமிழ்த்தும் வேளையில் உந்தன் வாழ்க்கை படகு உடைந்து போகும் நிலைமையில் உன்னை காக்கும்படி அவர் பாதங்கள் முன் நின்றிடும் உன்னை தூக்கும்படி அவர் கண்கள் உன்னை நோக்கிடும் அவரே நம் இரட்சகர் அவரே நம் புகலிடம் அவரே நம் நங்கூரம் அவர் இயேசு பயமும் திகிலும் உன்னை நெருக்கும் வேளையில் பெரும் அலைகள் உன்னை மூழ்க செய்யும் நேரத்தில் உன்னை மீட்கும்படி அவர் அற்புத கரத்தை நீட்டிடுவார் கடல் மேலே நடக்க தைரியம் உனக்கு தந்திடுவார் அவரே நம் இரட்சகர் அவரே நம் புகலிடம் அவரே நம் நங்கூரம் அவர் இயேசு உந்தன் வாழ்க்கை காரிருளில் இருக்கும் வேளையில் உதவி செய்வோர் யாரும் இல்லா நிலைமையில் பாதை காட்டும் கலங்கரை விளக்காய் இருந்திடுவார் உந்தன் வாழ்க்கை படகை அக்கரையில் சேர்த்திடுவார் அவரே நம் இரட்சகர் அவரே நம் புகலிடம் அவரே நம் நங்கூரம் அவர் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alaikkatal Mothum Pothu Undhan Pataku Saayum Pothu Un Kookkural Kaetkkum Pothu Un Pakkam Varukiraar Avarae Nam Iratsakar Avarae Nam Pugalidam Avarae Nam Nangkooram Avar Yesu Perungkaarrum Katalum Unnai Amizhtthum Vaelaiyil Undhan Vaazhkkai Pataku Utainthu Pokum Nilaimaiyil Unnai Kaakkumbati Avar Paadhanggal Mun Ninritum Unnai Thookkumbati Avar Kankal Unnai Nokkitum Avarae Nam Iratsakar Avarae Nam Pugalidam Avarae Nam Nangkooram Avar Yesu Payamum Thikilum Unnai Nerukkum Vaelaiyil Perum Alaigal Unnai Moozhka Seyyum Naeratthil Unnai Meetkumbati Avar Arpudha Karatthai Neettituvaar Katal Maelae Natakka Thairiyam Unakku Thanthituvaar Avarae Nam Iratsakar Avarae Nam Pugalidam Avarae Nam Nangkooram Avar Yesu Undhan Vaazhkkai Kaarirulil Irukkum Vaelaiyil Udhavi Seyvor Yaarum Illaa Nilaimaiyil Paathai Kaattum Kalanggarai Vilakkaay Irunthituvaar Undhan Vaazhkkai Patakai Akkaraiyil Saertthituvaar Avarae Nam Iratsakar Avarae Nam Pugalidam Avarae Nam Nangkooram Avar Yesu