பாடல் #36843
எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய்
🔤 Engkae Otuvaay Engkae Otuvaay
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய் இயேசுவின் அன்பை மறந்து எங்கே ஓடுவாய் பாவமன்னிப்பால் பரலோகமே பாவத்தின் பலன் நரகம் தானே இயேசுவே உன் இரட்சிப்பு அவரால் உன் மன்னிப்பு எண்ணிப்பார் எண்ணிப்பார் உன் வாழ்நாளை எண்ணிப்பார் 1.பாவ இன்பத்தை பால்போல் பருகி தேவ கோபத்தை தேடி ஓடுகிறாய் அருமையான ஆத்தும மீட்பு அதையறியாமல் அலைந்தோடுகிறாய் 2.உந்தன் பணத்தை நம்பி ஓடாதே சிறு துரும்பும் கூட வராதே உன் வாலிபத்தின் பாவங்கள் தானே உன்னுடன் மரித்து பின்பு உயிர்த்திடுமே 3.மரண தூதன் அருகிலிருக்கிறான் நரகத்தை விரிவாய் திறந்திருக்கிறான் கிருபையை நீ கருத்தில் எண்ணி குருசை நோக்கி கொல்கொதாவண்டை வா 4.விருதாவாக பொருள் சேர்கிறாய் வேஷமாகவே திரிந்தலைகிறாய் ஆஸ்தி சேர்க்கிறாய் அழிவை காண்கிறாய் அடுத்தவனுக்கு அதை விட்டு போகிறாய் 5.உன் இருதயம் மேட்டிமை கொண்டு உன் கையால் அழிந்து போகிறாய் உலக இன்பம் ஒரு நிமிஷமே உன்னத இன்பம் நித்திய காலமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkae Otuvaay Engkae Otuvaay Yesuvin Anpai Maranthu Engkae Otuvaay Paavamannippaal Paralogamae Paavatthin Palan Narakam Thaanae Yesuvae Un Iratsippu Avaraal Un Mannippu Ennippaar Ennippaar Un Vaazhnaalai Ennippaar 1.paava Inbatthai Paalpol Paruki Thaeva Kobatthai Thaeti Otukiraay Arumaiyaana Aatthuma Meetpu Athaiyariyaamal Alainthotukiraay 2.undhan Panatthai Nampi Otaathae Siru Thurumpum Kooda Varaathae Un Vaalibatthin Paavanggal Thaanae Unnudan Maritthu Pinpu Uyirtthitumae 3.marana Thoodhan Arukilirukkiraan Narakatthai Virivaay Thiranthirukkiraan Kirupaiyai Nee Karutthil Enni Kurusai Nokki Kolkothaavantai Vaa 4.viruthaavaaga Porul Saerkiraay Vaeshamaagavae Thirindhalaikiraay Aasthi Saerkkiraay Azhivai Kaankiraay Atutthavanukku Athai Vittu Pokiraay 5.un Irudhayam Maettimai Kontu Un Kaiyaal Azhinthu Pokiraay Ulaka Inbam Oru Nimishamae Unnatha Inbam Nitthiya Kaalamae