பாடல் #36841
என்றும் என் இயேசுவின்
🔤 Enrum En Yesuvin
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றும் என் இயேசுவின் பாடுகளைத் தியானிப்பேன் - 2 பாவிகட்காய்ப் பாடுபட்ட பரிசுத்தரின் பாடுகளை - 2 - என்றும் என் பரிசுத்த இரத்தமதைப் பாதகர்க்காய்த் தாம்சிந்தினீர் - 2 பரிதாபமாய்ப் பாடுபட்டீர் வேதனைகள் மிகவடைந்து - 2 அவனியில் அன்பர்தாமே அதிகமான அடிகள் பட்டீர் - 2 அன்பின் கயிறுகளால் சிலுவைதனில் கட்டப்பட்டீர் - 2 பாவங்களுக்குச் செத்து நீதிக்கு நான் பிழைக்கும்படி - 2 சுவி உம் சாரத்திலே என் பாவங்களைச் சுமந்தீர் - 2 என் மீறுதலால் காயப்பட்டு என் அக்கிரமத்தால் நொறுக்கப்பட்டார் - 2 என் சமாதான வாழ்வுக்காய் ஆக்கினைகளை அடைந்தீர் - 2 என் பாடுகளை ஏற்றுக்கொண்டு என் துக்கங்களைச் சுமந்தீர் - 2 என்னை நீர் உம்முடைய தழும்புகளால் குணமாக்குகிறீர் - 2 அசட்டை பண்ணப்பட்டீர் புறக்கணிக்கப்பட்டீர் - 2 நெருக்கப்பட்டீர் ஒடுக்கப்பட்டீர் மாம்சமது பிட்கப்பட்டீர் - 2 குற்றமில்லாத மாசற்ற கிறிஸ்து இயேசுவே நீர் - 2 குற்றவாளியாம் எனக்காய்ப் பரிதாபமாய் பலியானீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enrum En Yesuvin Paatugalaith Thiyaanippaen - 2 Paavigatkaayp Paatubatta Parisuttharin Paatugalai - 2 - Enrum En Parisuttha Ratthamathaip Paadhakarkkaayth Thaamsinthineer - 2 Parithaabamaayp Paatubatteer Vaedhanaigal Migavatainthu - 2 Avaniyil Anbarthaamae Athigamaana Atigal Patteer - 2 Anpin Kayirugalaal Siluvaidhanil Kattappatteer - 2 Paavanggalukkuch Setthu Neethikku Naan Pizhaikkumbati - 2 Suvi Um Saaratthilae En Paavanggalaich Sumantheer - 2 En Meerudhalaal Kaayappattu En Akkiramatthaal Norukkappattaar - 2 En Samaathaana Vaazhvukkaay Aakkinaigalai Ataintheer - 2 En Paatugalai Aerrukkontu En Thukkanggalaich Sumantheer - 2 Ennai Neer Ummutaiya Thazhumpugalaal Kunamaakkukireer - 2 Asattai Pannappatteer Purakkanikkappatteer - 2 Nerukkappatteer Otukkappatteer Maamsamathu Pitkappatteer - 2 Kurtramillaadha Maasartra Kiristhu Yesuvae Neer - 2 Kurtravaaliyaam Enakkaayp Parithaabamaay Paliyaaneer - 2