பாடல் #36840
கஸ்திகளடைந்தார் கஸ்திகளடைந்தார்
🔤 Kasthigalatainthaar Kasthigalatainthaar
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கஸ்திகளடைந்தார் கஸ்திகளடைந்தார் - 2 கர்த்தர் இயேசு கல்வாரியில் கஸ்திகளடைந்தார் - 2 கெத்செமனே தோட்டமதில் இரத்த வியர்வை சிந்தியே - 2 அன்று ஏதேன் - தோட்டமதில் - உயிர்கொண்ட - பாவமதை அன்பின் தேவன் - இயேசு தாமே - முற்றிலுமாய்க் - கொன்றிடவே அகோரமாம் கஸ்திதனைக் கெத்செமனேயில் தாம் அடைந்தார் - 2 பலவீனமான - மானிடரின் - பலவீனமெல்லாம் - போக்கிடவே பலவீனத்தோடு - பச்சைப் பச்சை - இரத்தமதில் - கமந்து வீழ்ந்தார் பலவானான எங்கள் தேவன் பயங்கரமாய்க் கஸ்திகளடைந்தார் - 2 சாபத்துள்ளான சந்ததியின் - சாபமெல்லாம் - நீக்கிடவே சாபத்தீடான - சிலுவை தனில் - சர்வநாதன் - தொங்கி மரித்தார் சர்வத்திற்கும் மேலான தேவன் சர்வ வல்லமையின் தேவன் - 2 சிரசினில் - முள்முடி சூட்டி - மூங்கில் தடியால் - அடிக்கப்பட்டார் அழகுவாய்ந்த - முகந்தனிலே - அநேகரால் - துப்பப்பட்டார் அருமை இயேசு அன்பு இயேசு அவனிதனில் கஸ்திகளடைந்தார் - 2 பாரமான - சிலுவை தன் - பாதகர்க்காய்த் - தாம் சுமந்தார் சிலுவை சுமக்கப் - பலனில்லாமல் - சிலுவையிலே - தாம் விழுந்தார் பாவி நேசன் பாவ நாசன் பரிதாபமாய்க் கஸ்திகளடைந்தார் - 2 சிலுவையுடன் - தரையில் வீழ்ந்து - எழும்பக்கூடாமல் இருந்தபோதும் சிறிதுமே - இரக்கமின்றி - ஈனர்களால் - வதைக்கப்பட்டார் சீர்மிகு தேவன் சீர்கெட்டோரால் சிறுமைப்படுத்தப்பட்டார் - 2 சிரேனே ஊரான் - சிலுவைதனைத் - தூக்கிடவே - மீண்டும் எழுந்தார் சிரேனே ஊரானும் தாங்கிட - சிலுவைதனை மீண்டும் சுமந்தார் சிலாக்கியமான பாக்கியமதனை ஆயத்தமாக்கக் கஸ்திகளடைந்தார் - 2 திருக்கரம் கால்கள் - தளர்ந்து நடுங்க - கொல்கொதா மலை யேறினார் குருசினில் - திருக்கரங்கால்கள் - ஆணிகளால் - அறையப்பட்டார் கொடுமையான பாடுகளைக் கர்த்தர் இயேசு தாமடைந்தார் - 2 சிலுவையில் - மூன்றாணிதனில் - வேதனையுற்று - துடி துடித்தார் விலாவதிலே - ஈட்டியினால் - ஓங்கியே - குத்தப்பட்டார் சாத்தானின் தலையதனைத் தகர்த்திடவே கஸ்திகளடைந்தார் - 2 அதிக பசி - தாகத்தினால் - கண்ணும் மிக குழி விழுந்தது அழகு முகம் - அழுக்கடைந்து - முதுகோடு வயிறும் - ஒட்டியது அன்பர் இயேசு அன்பின் இயேசு அகோரமாய்க் கஸ்திகளடைந்தார் - 2 பாவிகளின் - மன்னிப்புக்காய்ப் - பரிவுடனே வேண்டிக்கொண்டார் பாவிகளைப் - பரிசுத்தமாக்க - பரிசுத்தர் இயேசு - இரத்தம் சிந்தினார் பாவிகளைப் பரலோகம் சேர்க்க பரலோகின் தேவன் கஸ்திகளடைந்தார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kasthigalatainthaar Kasthigalatainthaar - 2 Kartthar Yesu Kalvaariyil Kasthigalatainthaar - 2 Kethsemanae Thottamathil Rattha Viyarvai Sinthiyae - 2 Anru Aethaen - Thottamathil - Uyirkonda - Paavamathai Anpin Devan - Yesu Thaamae - Murrilumaayk - Konridavae Akoramaam Kasthidhanaik Kethsemanaeyil Thaam Atainthaar - 2 Palaveenamaana - Maanidarin - Palaveenamellaam - Pokkidavae Palaveenatthotu - Pachsaip Pachsai - Ratthamathil - Kamanthu Veezhnthaar Palavaanaana Enggal Devan Payanggaramaayk Kasthigalatainthaar - 2 Saabatthullaana Sandhathiyin - Saabamellaam - Neekkidavae Saabattheetaana - Siluvai Thanil - Sarvanaadhan - Thongki Maritthaar Sarvatthirkum Maelaana Devan Sarva Vallamaiyin Devan - 2 Sirasinil - Mulmuti Sootti - Moongkil Thatiyaal - Atikkappattaar Azhakuvaayndha - Mugandhanilae - Anaegaraal - Thuppappattaar Arumai Yesu Anpu Yesu Avanidhanil Kasthigalatainthaar - 2 Paaramaana - Siluvai Than - Paadhakarkkaayth - Thaam Sumanthaar Siluvai Sumakkap - Palanillaamal - Siluvaiyilae - Thaam Vizhunthaar Paavi Naesan Paava Naasan Parithaabamaayk Kasthigalatainthaar - 2 Siluvaiyudan - Tharaiyil Veezhnthu - Ezhumbakkootaamal Irundhapothum Sirithumae - Irakkaminri - Eenarkalaal - Vathaikkappattaar Seermiku Devan Seerkettoraal Sirumaippatutthappattaar - 2 Siraenae Ooraan - Siluvaidhanaith - Thookkidavae - Meentum Ezhunthaar Siraenae Ooraanum Thaangkida - Siluvaidhanai Meentum Sumanthaar Silaakkiyamaana Paakkiyamathanai Aayatthamaakkak Kasthigalatainthaar - 2 Thirukkaram Kaalkal - Thalarnthu Natungga - Kolkothaa Malai Yaerinaar Kurusinil - Thirukkarangkaalkal - Aanigalaal - Araiyappattaar Kotumaiyaana Paatugalaik Kartthar Yesu Thaamatainthaar - 2 Siluvaiyil - Moonraanidhanil - Vaedhanaiyurru - Thuti Thutitthaar Vilaavathilae - Eettiyinaal - Ongkiyae - Kutthappattaar Saatthaanin Thalaiyathanaith Thakartthidavae Kasthigalatainthaar - 2 Athiga Pasi - Thaagatthinaal - Kannum Miga Kuzhi Vizhundhathu Azhaku Mugam - Azhukkatainthu - Muthukotu Vayirum - Ottiyathu Anbar Yesu Anpin Yesu Akoramaayk Kasthigalatainthaar - 2 Paavigalin - Mannippukkaayp - Parivudanae Vaentikkontaar Paavigalaip - Parisutthamaakka - Parisutthar Yesu - Rattham Sinthinaar Paavigalaip Paralogam Saerkka Paralokin Devan Kasthigalatainthaar - 2