பாடல் #36839
பரிசுத்தர் இரத்தம் சிந்தும்
🔤 Parisutthar Rattham Sinthum
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தர் இரத்தம் சிந்தும் பரிதாபக் காட்சி - 2 பார்மனமே பாதகராம் மானிடர்க்காக - 2 வேதனையுடன் வேண்டுதல் செய்யும் நேரத்தில் - 2 இரத்தம் சிந்தும் காட்சியைப்பார் அதோ மனமே - 2 ரத்த வேர்வையாலே திரேகம் மெத்தநனைந்து - 2 பாடுபடும் காட்சியைப்பார் அதோ தோட்டத்தில் - 2 துஷ்டர் கூடி தாடி ரோமம் பிடுங்கும் நேரத்தில் - 2 தரணியின் மீட்புக்காக இரத்தம் சிந்தினார் - 2 ஆசை நேசர் அவனிதனில் பாவிகட்காக -2 இரத்தம் சிந்தும் பரிதாப காட்சிதனைப் பார் - 2 வாரினால் அடித்து கதை வதைக்கும் நேரத்தில் - 2 அருமை இயேசு அவனிதனில் இரத்தம் சிந்தினார் - 2 பாவியே நீ பாருனக்காய் பரிசுத்தர் இயேசு - 2 இரத்தம் சிந்தும் பரிதாப காட்சிதனைப் பார் - 2 சிரசினில் முள்முடி சூட்டி மூங்கில் தடியால் - 2 அடிக்கும் வேளை இரத்தம் சிந்தும் காட்சிதனைப் பார் - 2 மானிடர்க்காக மாசற்ற தேவாட்டுக்குட்டி தன் - 2 இரத்தம் சிந்தும் காட்சிதனைப் பார் நீ மனமே - 2 கொல்கத்தாவின் குருசினில் மூன்றாணியில் தொங்கி - 2 துடி துடித்து இரத்தம் சிந்தும் காட்சிதனைப் பார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthar Rattham Sinthum Parithaabak Kaatsi - 2 Paarmanamae Paadhakaraam Maanidarkkaaga - 2 Vaedhanaiyudan Vaentudhal Seyyum Naeratthil - 2 Rattham Sinthum Kaatsiyaippaar Atho Manamae - 2 Rattha Vaervaiyaalae Thiraegam Metthananainthu - 2 Paatubatum Kaatsiyaippaar Atho Thottatthil - 2 Thushtar Kooti Thaati Romam Pitungkum Naeratthil - 2 Tharaniyin Meetpukkaaga Rattham Sinthinaar - 2 Aasai Naesar Avanidhanil Paavigatkaaga -2 Rattham Sinthum Parithaaba Kaatsidhanaip Paar - 2 Vaarinaal Atitthu Kathai Vathaikkum Naeratthil - 2 Arumai Yesu Avanidhanil Rattham Sinthinaar - 2 Paaviyae Nee Paarunakkaay Parisutthar Yesu - 2 Rattham Sinthum Parithaaba Kaatsidhanaip Paar - 2 Sirasinil Mulmuti Sootti Moongkil Thatiyaal - 2 Atikkum Vaelai Rattham Sinthum Kaatsidhanaip Paar - 2 Maanidarkkaaga Maasartra Thaevaattukkutti Than - 2 Rattham Sinthum Kaatsidhanaip Paar Nee Manamae - 2 Kolkatthaavin Kurusinil Moonraaniyil Thongki - 2 Thuti Thutitthu Rattham Sinthum Kaatsidhanaip Paar - 2