பாடல் #36824
என் இயேசுவே என் இயேசுவே
🔤 En Yesuvae En Yesuvae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே என் இயேசுவே கோடா கோடி ஸ்தோத்திரம் பஞ்சைப் போல் வெண்மையாக பாவம் யாவும் நீக்கினீரே சொந்த இரத்தம் சிந்தியே என்னையே மீட்ட இயேசுவே 1. அழிவை தேடி அலைந்த போது அன்பர் குரலை கேட்டேன் அவரிடம் வந்து அனைத்தையும் பெற்று மகிழ்வுடன் வாழுகின்றேன் - நானும் 2. உலக இன்பம் அற்பம் என்று உலகை நான் வெறுத்தேன் உலக ஆஸ்தி குப்பை என்று நானும் முடிவு செய்தேன் இயேசுவுக்காக ஜீவித்து வாழ ஊழியம் செய்ய வந்தேன் - நானும் 3. குயவன் கையில் களிமண் போல உம்மிடம் நான் உள்ளேன் உமக்கு உகந்த பாத்திரமாக என்னை நீர் உருவாக்கும் - என் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae En Yesuvae Kotaa Koti Sthotthiram Panjsaip Pol Venmaiyaaga Paavam Yaavum Neekkineerae Sondha Rattham Sinthiyae Ennaiyae Meetta Yesuvae 1. Azhivai Thaeti Alaindha Pothu Anbar Kuralai Kaettaen Avaridam Vanthu Anaitthaiyum Perru Makizhvudan Vaazhukinraen - Naanum 2. Ulaka Inbam Arpam Enru Ulakai Naan Verutthaen Ulaka Aasthi Kuppai Enru Naanum Mutivu Seythaen Yesuvukkaaga Jeevitthu Vaazha Oozhiyam Seyya Vanthaen - Naanum 3. Kuyavan Kaiyil Kaliman Pola Ummidam Naan Ullaen Umakku Ugandha Paatthiramaaga Ennai Neer Uruvaakkum - En Thaevaa