பாடல் #36819
பெத்லகேம் ஊரில் பிறந்தன
🔤 Pethlakaem Ooril Pirandhana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லகேம் ஊரில் பிறந்தனர் இயேசு இரட்சகராக இகமதிலே பரிசுத்த ஆவியால் அவதரித்தனர் கன்னிகை மரியின் மகவாக - 2 நானிலம் தனிலே இயேசு பிறந்தார், நாதனின் ஜெனனம் அதிசயமே ஜீவனும் வழியும் சத்தியமும் அவர் நித்தமும் அவரைத் துதிப்போமே மாட்டின் தொழுவம் தானதில் உதித்தார் மகிமையின் தேவன் மறு உருவாய் கர்த்தரின் மகிமை தூதனுடனே ஆயர்கள் காண தோன்றியதே இதோ நற்செய்தி உங்களுக்காக பிறந்தனர் ஏசு தாவீதின் ஊரில் என்றுரைத்திடவே பரலோக சேனை பாங்குடன் தோன்றி பாடினரே ஆயர்கள் கூடி அமலனைத் தேடி அனைவரும் சென்றனர் அன்றிரவில் பிரிவினை யாகிய நடுச்சுவர் தகர்க்க பாரினில் வந்து தோன்றினாரே பாவங்கள் நீக்கி பாரினில் எம்மை பரிசுத்தம் செய்ய பிறந்தாரே தேவனின் ரூபம் தேவனின் சாயல் மாந்தர்கள் எமக்கு அளித்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlakaem Ooril Pirandhanar Yesu Iratsakaraaga Igamathilae Parisuttha Aaviyaal Avatharitthanar Kannikai Mariyin Makavaaga - 2 Naanilam Thanilae Yesu Piranthaar, Naadhanin Jenanam Athisayamae Jeevanum Vazhiyum Satthiyamum Avar Nitthamum Avaraith Thuthippomae Maattin Thozhuvam Thaanathil Uthitthaar Makimaiyin Devan Maru Uruvaay Karttharin Makimai Thoodhanudanae Aayarkal Kaana Thonriyathae Itho Narseythi Unggalukkaaga Pirandhanar Aesu Thaaveethin Ooril Enruraitthidavae Paraloga Saenai Paangkudan Thonri Paatinarae Aayarkal Kooti Amalanaith Thaeti Anaivarum Sendranar Anriravil Pirivinai Yaakiya Natuchsuvar Thakarkka Paarinil Vanthu Thonrinaarae Paavanggal Neekki Paarinil Emmai Parisuttham Seyya Piranthaarae Devanin Roobam Devanin Saayal Maandharkal Emakku Alitthidavae