பாடல் #36795
எண்ணுக்கடங்காத நன்மைகள்
🔤 Ennukkatangkaadha Nanmaigal
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எண்ணுக்கடங்காத நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் என்றும் என்றென்றுமாய் அல்லே அல்லேலூயா - 4 1. வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவரிடமிருந்து - 2 எனக்கு வேண்டிய ஒத்தாசை வரும் - 2 என்றும் என்றென்றும் 2. எனது காலைத் தள்ளாடவொட்டார் என்னைக் காக்கிறவர் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லையே தூங்குவதில்லையே 3. கர்த்தர் என்னைக் காக்கிறவர் வலது பக்கத்திலே நிழலாவார் பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் சேதப்படுத்தாது - என்னை 4. கர்த்தர் எல்லாத் தீங்குக்கும் விலக்கி என்னைக் காத்திடுவார் என் போக்கையும் வரத்தையும் என்றும் என்றும் காப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennukkatangkaadha Nanmaigal Varumae En Kankal Aeretuppaen Enrum Enrenrumaay Allae Allaelooyaa - 4 1. Vaanatthaiyum Poomiyaiyum Pataittha Aandavaridamirunthu - 2 Enakku Vaentiya Otthaasai Varum - 2 Enrum Enrenrum 2. Enathu Kaalaith Thallaadavottaar Ennaik Kaakkiravar Urangkaar Isravaelaik Kaakkiravar Urangkuvathumillaiyae Thoongkuvathillaiyae 3. Kartthar Ennaik Kaakkiravar Valathu Pakkatthilae Nizhalaavaar Pakalilae Veyilaakilum Iravilae Nilavaakilum Saedhappatutthaathu - Ennai 4. Kartthar Ellaath Theengkukkum Vilakki Ennaik Kaatthituvaar En Pokkaiyum Varatthaiyum Enrum Enrum Kaappaar