பாடல் #36786
கர்த்தரே தான் தெய்வம்
🔤 Karttharae Thaan Theyvam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரே தான் தெய்வம் - இதை கர்மேலிலே நிதம் சாற்றிடுவோம், 1. எலியாவின் தெய்வமே - அந்தி பலியாவும் ஏற்றது சொல்வோம் கர்மேலிலே அவர் மகிமையைக் கண்டோம் கரங்குவித்தவர் துதி அனுதினம் செய்வோம் 2. வற்றிடும் கேரீத் ஓர் நாள் - என சாற்றினோம் சத்தியம் அந்நாள் ஏற்றிடுமே எமை சாரிபாத் என்றோம் போற்றி புகழுவோம் இயேசுவின் நாமம் 3. வனாந்திர வழியதைக் கண்டோம் வாச வழியதைத் தொடர்ந்தோம் வெய்யிலிலே அவர் நிழல் தரும் முகிலாம் மையிருளில் அவர் ஒளிதரும் நிலவாம் 4. நின்றோம் நாம் தனிமையில் அன்று ஆம் வென்றோம் நாம் யாவையும் இன்று ஏங்கினோம் அவர் தாங்குவேன் என்றார் ஏழைகட்காகவே வாக்குகள் தந்தார் 5. கண்ணீரின் ஜெபத்தைக் கேட்டார் - அருள் தண்ணீரை ஊற்று திறந்தார் எண்ணுவோம் பெற்ற நன்மைகள் அனைத்தும் என்றென்றும் அவர் துதிவாயினில் இருக்கும் 6. ஆவியின் புதுமையில் நிறைந்து - நம் ஆண்டவன் சேவையே புரிந்து ஆயத்தம் செய்வோம் வருகையை நினைத்து ஆனந்தம் கொள்ளுவோம் ஆவியில் மகிழ்ந்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharae Thaan Theyvam - Ithai Karmaelilae Nidham Saarrituvom, 1. Eliyaavin Theyvamae - Anthi Paliyaavum Aertrathu Solvom Karmaelilae Avar Makimaiyaik Kantom Karangkuvitthavar Thuthi Anuthinam Seyvom 2. Varritum Kaereeth Or Naal - Ena Saarrinom Satthiyam Annaal Aerritumae Emai Saaripaath Enrom Porri Pugazhuvom Yesuvin Naamam 3. Vanaanthira Vazhiyathaik Kantom Vaasa Vazhiyathaith Thodarnthom Veyyililae Avar Nizhal Tharum Mukilaam Maiyirulil Avar Olidharum Nilavaam 4. Ninrom Naam Thanimaiyil Anru Aam Venrom Naam Yaavaiyum Inru Aengkinom Avar Thaangkuvaen Enraar Aezhaigatkaagavae Vaakkugal Thanthaar 5. Kanneerin Jebatthaik Kaettaar - Arul Thanneerai Oorru Thiranthaar Ennuvom Pertra Nanmaigal Anaitthum Enrenrum Avar Thuthivaayinil Irukkum 6. Aaviyin Puthumaiyil Nirainthu - Nam Aandavan Saevaiyae Purinthu Aayattham Seyvom Varukaiyai Ninaitthu Aanandham Kolluvom Aaviyil Makizhnthu