பாடல் #3677
மேலோக ராஜன் வருங் காலமாகுது
🔤 Maeloga Raajan Varung Kaalamaakuthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேலோக ராஜன் வருங் காலமாகுது பரலோக மகிமை பெறலாம் பாவி ஓடி வா. பாவத்தை வெறு பசாசை ஓட்டிடு பரிசுத்தம் நீதி அன்பு தாழ்மை அங்கியாய்ப் போடு. பரிசுத்தரைக் காண வெகு சுத்தம் வேண்டுமே யேசுவே உம் ரத்தத்தாலே சுத்தமாக்குமே. பாவம் நித்தமும் மனம் நோகச்செய்யுது பரிசுத்தரித்தரையில் வந்தால் முற்றும் நீங்கிடும் இரவுபோயிற்று பகல் சமீபமாயிற்று இருளின் செய்கை தள்ளி ஒளியின் கவசம் தரிப்போம் குடிவெறி வேண்டாம் கோள் குண்டணி வேண்டாம் பகலின் பிள்ளைகள்போல் சீராய் நடக்கக்கடவோம் எருசலேம் நகர் மகா அரசர் மாளிகை அதை ஏறிட்டுப் கண்ணாலே பார்த்தால் ஏக்கம் தீருமே ஏழுடுகையில் மார்பருகே பொற்கச்சை வெண்பஞ்சு நிறமாம் சிரசு ஏசுவுக்குண்டு தூதர் சேனைகள் துதி பாடும் ஓசையால் இப்பூதலம் திடுக்கிட வானோர்கள் மகிழ ஆசனங்களில் ஏசு தாசரிருப்பார் அதன் மத்தியிலோர் ஆசனம் இம்மானுவேலர்க்கு பார்க்கக் கூடாத பரிசுத்த ஜோதியாய் பரலோகராஜன் வீற்றிருப்பார் தூதர்கள் சூழ ஒப்பார்சின் தங்கக் கச்சை இடையிற் கட்டியே உம்பர்கள் ஒழுங்காக நின்று கீதம் பாடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maeloga Raajan Varung Kaalamaakuthu Paraloga Makimai Peralaam Paavi Oti Vaa. Paavatthai Veru Pasaasai Ottitu Parisuttham Neethi Anpu Thaazhmai Angkiyaayp Potu. Parisuttharaik Kaana Veku Suttham Vaentumae Yaesuvae Um Ratthatthaalae Sutthamaakkumae. Paavam Nitthamum Manam Nogachseyyuthu Parisuttharittharaiyil Vanthaal Murrum Neengkitum Iravupoyirru Pakal Sameebamaayirru Irulin Seykai Thalli Oliyin Kavasam Tharippom Kutiveri Vaentaam Kol Kundani Vaentaam Pakalin Pillaigalpol Seeraay Natakkakkatavom Erusalaem Nakar Makaa Arasar Maalikai Athai Aerittup Kannaalae Paartthaal Aekkam Theerumae Aezhutukaiyil Maarparukae Porkachsai Venpanjsu Niramaam Sirasu Aesuvukkuntu Thoodhar Saenaigal Thuthi Paatum Osaiyaal Ippoodhalam Thitukkida Vaanorkal Makizha Aasananggalil Aesu Thaasariruppaar Adhan Matthiyilor Aasanam Immaanuvaelarkku Paarkkak Kootaadha Parisuttha Jothiyaay Paralogaraajan Veerriruppaar Thoodharkal Soozha Oppaarsin Thanggak Kachsai Itaiyir Kattiyae Umbarkal Ozhungkaaga Ninru Keedham Paatuvaar