பாடல் #3676
மேலோக இன்ப நாட்டில் நித்ய வீடுண்டே
🔤 Maeloga Inba Naattil Nithya Veetuntae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மேலோக இன்ப நாட்டில் நித்ய வீடுண்டே சாவில்லா அவ்வீட்டில் ஓயாத வாழ்வுண்டே தூய அங்கி தரித்து தூதர் சாஷ்டாங்கம் செய்வார். ஜோதி வீசும் அவ்வீட்டை என்று பார்த்தானந்திப்பேன்? ஆ! ஆனந்தமாம் பேரின்பம் உண்டாம் நல் மீட்பரின் வீட்டில் பேரின்பம் உண்டாம். 2. இலங்கும் அந்த வீட்டில் பாலர் பாடுவார் தேவ ஆசனத்தில் மீட்பர் வீற்றாளுவார் பாலர் கீதங்கள் பாடி ஓய்வின்றி ஆர்ப்பரிப்பார். ஜோதி வீசும் அவ்வீட்டை என்று பார்த்தானந்திப்பேன்? 3. சீக்கிரம் மோட்ச நகர் யாவரும் சேருவார். யேசு எந்தன் மீட்பர் சாவில் நான் அஞ்சிடேன் தூய நேசரைக் காண்பேன் தங்கச் சிம்மாசனத்தில் ஜோதி வீசும் அவ்வீட்டை என்றும் பார்த்தானந்திப்பேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Maeloga Inba Naattil Nithya Veetuntae Saavillaa Avveettil Oyaadha Vaazhvuntae Thooya Angki Tharitthu Thoodhar Saashtaanggam Seyvaar. Jothi Veesum Avveettai Enru Paartthaananthippaen? Aa! Aanandhamaam Paerinbam Untaam Nal Meetparin Veettil Paerinbam Untaam. 2. Ilangkum Andha Veettil Paalar Paatuvaar Thaeva Aasanatthil Meetpar Veerraaluvaar Paalar Keedhanggal Paati Oyvinri Aarpparippaar. Jothi Veesum Avveettai Enru Paartthaananthippaen? 3. Seekkiram Motsa Nakar Yaavarum Saeruvaar. Yaesu Endhan Meetpar Saavil Naan Anjsitaen Thooya Naesaraik Kaanpaen Thanggach Simmaasanatthil Jothi Veesum Avveettai Enrum Paartthaananthippaen.