பாடல் #3668
மேசியா இயேசு ராஜா
🔤 Maesiyaa Yesu Raajaa
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேசியா இயேசு ராஜா – அவர் மீண்டும் வருகிறார் எந்தன் ஆவல் தீர்க்க அவர் சீக்கிரம் வருகிறார் அவர் முகமே நான் கண்டிடுவேன் அவரோடு நானும் சென்றிடுவேன் மகிமை மகிமை அந்த நாள் மகிமை தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம் சந்தோஷமாகவே மாறியே போகும் தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம் மகிமையாய் அன்று மாற்றிடுமே இன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்ற மகிமைக்கு ஈடாய் ஆகுமோ இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன் ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன் இனியும் தாமதம் செய்யாரே அவர் சொன்னபடியே வந்திடுவார் அந்த நாளில் அவரை கண்டு நானும் ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன் எனக்காகவே இரத்தம் சிந்தின கரத்தை கண்டு ஆயிரம் முத்தங்களிடணும் சிலுவை சுமந்து நடந்த பாதம் விழுந்து நன்றி சொல்லிடணும் இந்த தியாகம் செய்த அன்பு முகமே காண ஏங்குகின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maesiyaa Yesu Raajaa – Avar Meentum Varukiraar Endhan Aaval Theerkka Avar Seekkiram Varukiraar Avar Mugamae Naan Kantituvaen Avarotu Naanum Senrituvaen Makimai Makimai Andha Naal Makimai Devanin Varukaiyil En Thukkamellaam Santhoshamaagavae Maariyae Pokum Devanukkaay Patta Paatugalellaam Makimaiyaay Anru Maarritumae Inru Kaanum Paatugal Inimael Varukindra Makimaikku Eetaay Aakumo Yesuvukkaay Naan Kaatthirukkinraen Aayatthamaay Ethir Paartthirukkinraen Iniyum Thaamatham Seyyaarae Avar Sonnapatiyae Vanthituvaar Andha Naalil Avarai Kantu Naanum Aatuvaen Paatuvaen Thulluvaen Enakkaagavae Rattham Sinthina Karatthai Kantu Aayiram Mutthanggalidanum Siluvai Sumanthu Natandha Paadham Vizhunthu Nanri Sollidanum Indha Thiyaagam Seytha Anpu Mugamae Kaana Aengkukinraen