பாடல் #3666
மேசியா இதோ சமீபம் என்றோர்
🔤 Maesiyaa Itho Sameebam Enror
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மேசியா இதோ சமீபம் என்றோர் சத்தம் கேளுங்கள் வெளிச்சத்தின் பி;ள்ளைகளே ராவின் கனா நீக்குங்கள். 2. இவ்வெச்சரிப்பால் விழித்து லோக பாசம் விடுங்கள் பாவ நாசர் மேசியாவின் வருகையைப் பாருங்கள். 3. எதிர் பார்த்த கிறிஸ்து நாதர் மன்னிப்பீய வந்தாரே அந்த மன்னிப்பை அடைய கண்ணீரோடு சேர்வோமே. 4. மாட்சியோடு வரும்போது பாரிலுள்ளோர் அஞ்சுவார் அவர் அன்பாம் கேடகத்தால் தாசர் தம்மை மறைப்பார். 5. தேவ சுதன் மகா ராஜா உலகின் ரட்சகர்க்கே கனம் பலம் மாட்சி புகழ் நித்ய காலம் ஆகவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Maesiyaa Itho Sameebam Enror Sattham Kaelunggal Velicchatthin Pi;llaigalae Raavin Kanaa Neekkunggal. 2. Ivveccharippaal Vizhitthu Loga Paasam Vitunggal Paava Naasar Maesiyaavin Varukaiyaip Paarunggal. 3. Ethir Paarttha Kiristhu Naadhar Mannippeeya Vanthaarae Andha Mannippai Ataiya Kanneerotu Saervomae. 4. Maatsiyotu Varumpothu Paarilullor Anjsuvaar Avar Anpaam Kaedakatthaal Thaasar Thammai Maraippaar. 5. Thaeva Sudhan Makaa Raajaa Ulakin Ratsakarkkae Kanam Palam Maatsi Pugazh Nithya Kaalam Aagavae.