பாடல் #3660
மெய்பக்தர் தாசரே
🔤 Meypakthar Thaasarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மெய்பக்தர் தாசரே! கொண்டாடக் கூடுவோம் சந்தோஷ கீதம் பாடியே (2) கர்த்தாவைப் போற்றுவோம்.(2) மா உன்னத சீயோன் சோபித சுந்தர சீயோன் மா உன்னத திவ்விய சீயோன் நாம் நோக்கியே செல்லுகிறோம். 2. ரட்சண்யக் கூட்டத்தார் பேரீவுக்காகவே மென்மேலும் நன்றி சொல்லுவார் (2) பாடாமல் தீராதே. (2) மா உன்னத சீயோன் சோபித சுந்தர சீயோன் மா உன்னத திவ்விய சீயோன் நாம் நோக்கியே செல்லுகிறோம். 3. பேரன்பின் வாரியில் நாம் மூழ்கி ஆழ்கிறோம் பின் மோட்சானந்த வீட்டினில் (2) ஒன்றாகப் பூரிப்போம். (2) மா உன்னத சீயோன் சோபித சுந்தர சீயோன் மா உன்னத திவ்விய சீயோன் நாம் நோக்கியே செல்லுகிறோம். 4. விசாரம் துக்கத்தை விட்டார வாரிப்போம் இம்மானுவேலின் தேசத்தை (2) நாம் நாடிப் போகிறோம். (2) மா உன்னத சீயோன் சோபித சுந்தர சீயோன் மா உன்னத திவ்விய சீயோன் நாம் நோக்கியே செல்லுகிறோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Meypakthar Thaasarae! Kontaadak Kootuvom Santhosha Keedham Paatiyae (2) Kartthaavaip Porruvom.(2) Maa Unnatha Seeyon Sopidha Sundhara Seeyon Maa Unnatha Thivviya Seeyon Naam Nokkiyae Sellukirom. 2. Ratsanyak Koottatthaar Paereevukkaagavae Menmaelum Nanri Solluvaar (2) Paataamal Theeraathae. (2) Maa Unnatha Seeyon Sopidha Sundhara Seeyon Maa Unnatha Thivviya Seeyon Naam Nokkiyae Sellukirom. 3. Paeranpin Vaariyil Naam Moozhki Aazhkirom Pin Motsaanandha Veettinil (2) Onraagap Poorippom. (2) Maa Unnatha Seeyon Sopidha Sundhara Seeyon Maa Unnatha Thivviya Seeyon Naam Nokkiyae Sellukirom. 4. Visaaram Thukkatthai Vittaara Vaarippom Immaanuvaelin Thaesatthai (2) Naam Naatip Pokirom. (2) Maa Unnatha Seeyon Sopidha Sundhara Seeyon Maa Unnatha Thivviya Seeyon Naam Nokkiyae Sellukirom.