பாடல் #3645
முன் செல்லும் தேவா
🔤 Mun Sellum Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முன் செல்லும் தேவா, என் இயேசு ராஜா சேனையின் அதிபதியே! தடைகளை தகர்த்திடுமே, எதிர்ப்பினை நொறுக்கிடுமே - 2 தூய்மையின்மேல் தூய்மை, வெற்றியின்மேல் வெற்றி இயேசுவின் நாமத்தினால் ஜெயம் நமக்கென்றும் அல்லேலூயா ஜெயம் நமக்கென்றும் - ஆமென் ஆமென் வருட முழுவதும், ஒவ்வொரு நாளும் வழிகாட்டிச் சென்றிடுமே வலக்கரம் பிடித்திடுமே, வழுவாது காத்திடுமே வாழ்நாள் முழுவதும், உம் பணி செய்ய அபிஷேகம் ஈந்திடுமே ஸ்தம்பமாய் அக்கினி, ஸ்தம்பமாய் மேகம் ஒரு நாளும் விலகிடாதே! மனிதர் விலகிடலாம், மலைகளும் விலகிடலாம் மாறாத கிருபை நீங்காத தயவு என்றென்றும் எனக்குண்டே! உம் வாக்கைப் பிடித்து, முன்னேறிச் செல்லுவேன் ஜெயமாய் நடத்துவீரே! வருகையில் வந்திடுவீர், கிரீடங்கள் தந்திடுவீர் உம் மார்பினில் மகிழ்ந்து, நேசத்தை ருசித்து வாழுவேன் நித்தியமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mun Sellum Thaevaa, En Yesu Raajaa Saenaiyin Athibathiyae! Thataigalai Thakartthitumae, Ethirppinai Norukkitumae - 2 Thooymaiyinmael Thooymai, Verriyinmael Verri Yesuvin Naamatthinaal Jeyam Namakkenrum Allaelooyaa Jeyam Namakkenrum - Aamen Aamen Varuda Muzhuvathum, Ovvoru Naalum Vazhikaattich Senritumae Valakkaram Pititthitumae, Vazhuvaathu Kaatthitumae Vaazhnaal Muzhuvathum, Um Pani Seyya Apishaegam Eenthitumae Sthambamaay Akkini, Sthambamaay Maegam Oru Naalum Vilakitaathae! Manidhar Vilakidalaam, Malaigalum Vilakidalaam Maaraadha Kirupai Neengkaadha Thayavu Enrenrum Enakkuntae! Um Vaakkaip Pititthu, Munnaerich Selluvaen Jeyamaay Natatthuveerae! Varukaiyil Vanthituveer, Kireedanggal Thanthituveer Um Maarpinil Makizhnthu, Naesatthai Rusitthu Vaazhuvaen Nitthiyamaay