பாடல் #364
ஆண்டவரின் பக்கம் நிற்பவர்கள் யார்
🎙 கிறிஸ்தவ பாடல்
1. ஆண்டவரின் பக்கம் நிற்பவர்கள் யார்? ஊழியத்தைச் செய்ய யார் எழும்புவார்? உலகத்தை விட்டு நற்போராட்டுக்கே பிரதிஷ்டையுள்ள வீரர்கள் எங்கே? ஆண்டவர் பக்கம் யார்? தேவ தொண்டர் யார்? ஜீவன் ரட்சிக்க யார் யேசைச் சேருவார்? உம் நேச மீட்பினால் உம் கிருபையால் நாம் ஆண்டவர் பக்கம் உம் சொந்தம் அதால். 2. பொன்னும் முத்துமல்ல ரத்தம் கொடுத்தீர் க்ரீடமாய் சிரசில் தரித்துக் கொள்வீர் உம்மிடம் சேர்ந்தோரை ஆசீர்வதிப்பீர் விடுதலை ஆக்கி ஊக்கம் கொடுத்தீர். 3. போரும் எதிரியும் மூர்க்கமாகவே தேவரீரின் சேனை ஜெயம் கொள்ளுமே அவர் கொடி கீழே கெலிப்பு வரும் அவர் மாறா சத்யம் வெற்றி கொடுக்கும். 4. சத்துரு பலத்துப் போர் நெருங்கினும் ஜெயிப்பார் நம் யேசு புகழ்ச்சி என்றும் அவர் கொடியின் கீழ் ஜெயம் கிடைக்கும் அவர் மாறா சத்யம் என்றுமே நிற்கும்.