பாடல் #3638
முகமுகமாகக் காண்பேன்
🔤 Mugamugamaagak Kaanpaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. முகமுகமாகக் காண்பேன் அன்பராம் என் யேசுவை முழு மகிமையாய்க் காண்பேன் என் கண்களால் நான் காண்பேன். முக முகமாகக் காண்பேன் வானங்களுக்கப்பாலே முழு மகிமையில் காண்பேன் என் கண்களால் நான் காண்பேன். 2. இப்போ நிழலாட்டமாக திரை நடுவாகத்தான் அந்த நாள் வரும்பொழுதோ முழு மகிமையிலே. 3. கண்டாலே என்ன ஆனந்தம்! துக்கம் துன்பம் நீங்குமே! யாவும் நேர்ப்படுத்தப்பட்டு இருள் நீங்கி விடுமே. 4. ஆனந்தமாம் அந்நிமிஷம் கண்டவரை அறிய! ரட்சா பெருமான் என் யேசு எனக்காக மாண்டவர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Mugamugamaagak Kaanpaen Anbaraam En Yaesuvai Muzhu Makimaiyaayk Kaanpaen En Kankalaal Naan Kaanpaen. Muga Mugamaagak Kaanpaen Vaananggalukkappaalae Muzhu Makimaiyil Kaanpaen En Kankalaal Naan Kaanpaen. 2. Ippo Nizhalaattamaaga Thirai Natuvaagatthaan Andha Naal Varumpozhutho Muzhu Makimaiyilae. 3. Kantaalae Enna Aanandham! Thukkam Thunbam Neengkumae! Yaavum Naerppatutthappattu Irul Neengki Vitumae. 4. Aanandhamaam Annimisham Kandavarai Ariya! Ratsaa Perumaan En Yaesu Enakkaaga Maandavar.