பாடல் #3634
மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
🔤 Meetpar Yesu Kurusil Thongkinaarae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே மூன்றாணி மீதில் காயம் அடைந்தே லோகப் பாவம் தீர்க்க பலியான தேவ ஆட்டுக் குட்டியானவர் சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில் இயேசுவே கல்வாரி சிலுவையில் ஏறி ஜீவன் தந்திராவிடில் – ஏழையான் என் பாவ பாரங்களை எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில் தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ என்று இயேசு கதறினாரே பாவத்தால் பிதாவின் முகத்தையும் பார்க்கவும் முடியவில்லையோ – அவர் அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே ஆச்சரிய தேவ அன்பைப் பாட – ஆயிரம் நாவுகள் போதுமோ – பதினாயிரம் பாவ பாரம் லோகக் கவலைகள் தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும் தேடி நாடி ஓடி வந்தால் உன்னைத் தேற்றி ஆற்றித் தாங்குவார் அவர் – இப்போ கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால் கல் மனமும் உருகிடுமே மாய லோக ஆசை வஞ்சிக்குமே மாறிடாத இயேசு போதுமே – என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meetpar Yesu Kurusil Thongkinaarae Moonraani Meethil Kaayam Atainthae Logap Paavam Theerkka Paliyaana Thaeva Aattuk Kuttiyaanavar Sondhamaana Rattham Sinthi Meettu Indhalavaay Anpu Koorndhavar -emmil Yesuvae Kalvaari Siluvaiyil Aeri Jeevan Thanthiraavitil – Aezhaiyaan En Paava Paaranggalai Engku Senru Theertthuk Kolluvaen – Poovil Devanae Ennai Aen Kaivitteero Enru Yesu Katharinaarae Paavatthaal Pithaavin Mugatthaiyum Paarkkavum Mutiyavillaiyo – Avar Annai Thanthai Yaavarilum Maelaay Anpu Koornthaar Annal Yesuvae Aacchariya Thaeva Anpaip Paada – Aayiram Naavugal Pothumo – Pathinaayiram Paava Paaram Logak Kavalaigal Thaavi Unnaich Soozhndha Pothilum Thaeti Naati Oti Vanthaal Unnaith Thaerri Aarrith Thaangkuvaar Avar – Ippo Koramaam Siluvaik Kaatsi Kantaal Kal Manamum Urukitumae Maaya Loga Aasai Vanjsikkumae Maaritaadha Yesu Pothumae – Enrum