பாடல் #36324
தேசம் நம் வசமாகும் நேரமிது
🔤 Thaesam Nam Vasamaakum Naeramithu
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேசம் நம் வசமாகும் நேரமிது தேவ சேனையே நீயும் நிமிர்ந்துவிடு அச்சப்படாதே நீயும் பயந்துவிடாதே எந்த சக்தியும் நம்மை நெருங்க முடியாதே யாரை ஆராதிக்கின்றோம் நாம் - 4 அவர் ஜீவனுள்ளவர் என்றும் சர்வ வல்லவர் எல்லா நாமத்திற்கும் மேலானவர் ஆயிரம் ஆண்டுகள் அவருடனே நீ வாழ்ந்திடவே ஆளுகை செய்வோம் என்பதை நீ அறிந்திடவே தூசியை உதறிடு சீயோனே - உன் வல்லமையை தரித்துக்கொள் தோல்வியை கண்டு தோழா நீயும் துவண்டுவிடாதே உனக்காய் ஜெயக்கொடி ஏற்றும் இயேசு உண்டு மறந்துவிடாதே இக்கால பாடுகள் என்ன செய்திடும் இனி வாழ்வு மகிமை அன்றோ கொடுமுடியில் சபையை நிறுவிட வருகிறார் கோடா கோடியாய் பெருகிட கிருபை தருகிறார் சீயோனே நீயும் மகிழ்ந்து பாடு - உன்னை மீட்டிடும் நாள் சமீபம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaesam Nam Vasamaakum Naeramithu Thaeva Saenaiyae Neeyum Nimirnthuvitu Acchappataathae Neeyum Payanthuvitaathae Endha Sakthiyum Nammai Nerungga Mutiyaathae Yaarai Aaraathikkinrom Naam - 4 Avar Jeevanullavar Enrum Sarva Vallavar Ellaa Naamatthirkum Maelaanavar Aayiram Aantugal Avarudanae Nee Vaazhnthidavae Aalukai Seyvom Enbathai Nee Arinthidavae Thoosiyai Udharitu Seeyonae - Un Vallamaiyai Tharitthukkol Tholviyai Kantu Thozhaa Neeyum Thuvantuvitaathae Unakkaay Jeyakkoti Aerrum Yesu Untu Maranthuvitaathae Ikkaala Paatugal Enna Seythitum Ini Vaazhvu Makimai Anro Kotumutiyil Sapaiyai Niruvida Varukiraar Kotaa Kotiyaay Perukida Kirupai Tharukiraar Seeyonae Neeyum Makizhnthu Paatu - Unnai Meettitum Naal Sameebam